உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

29

கோட்டக்கல் கடற்படைவீரர்கள் ஒரு போர்ச்சுகீசியக் கப்பலைத் திடுமெனத் தாக்கி, சிறைப்பட்டவர்கள் அத்தனைபோரையும் அந்தப் பாறையிலேயே பலியிட்டனராம்!58

நாரா எது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அகலப்புழை ஆற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூராய் இருந்ததாகத் தோற்றுகிறது. துண்டிஸ் என்பது எப்படியும் குவிலாண்டி நகரிலிருந்து ஏறத்தாழ ஐந்துகல் வடக்கே தற்காலப் பள்ளிக்கரையிருக்கு மிடத்தில் முன்பு அமைந்திருந்த தொண்டி தான் என்பதில் ஐயமில்லை. இன்றளவும் அராபியாவி லிருந்து வருகிற வாணிகக் கப்பல்கள் தொண்டியிலிருந்து மூன்றுகல் தெற்கிலுள்ள பழைய கொல்லம் அல்லது பந்தலாயினி கொல்லம் என்ற சிற்றூருக்கு எப்போதும் ஒழுங்காக வந்து செல்லுகின்றன.

59

துண்டிஸுக்கும் முஸிரிஸுக்கும் இடையே டாலமி கடற்கரையில் இரண்டு நகரங்களையும் உள்நாட்டில் மூன்று நகரங்களையும் குறிப்பிடுகிறார். கடற்கரை நகரங்கள் பிரமகரா, கலைக்காரியாஸ் என்பன. உள்நாட்டு நகரங்கள் நரூல்லா, கூபா, பாலூரா என்பன. பிரமகரா என்பதைப் பிரமகுளமாகவே கொள்ளலாம். கலைக்கரியாஸ் பெரும்பாலும் சாலகூரியாய் இருத்தல் சாலும். பாலூரா, பாளையூர் என்பதில் ஐயமில்லை. இது சௌகாட் அருகில் இன்னும் மக்கள் திரள் உடைய இடமகன்ற அம்சமாகவே உள்ளது. முசிரிஸ் தமிழ் முசிறியே என்று தயக்கமின்றிக் கூறலாம்.

தமிழ்க் கவிஞர் கூற்றுப்படி, முசிறி பெரியாற்றின் கடல் முகத்தருகே அமைந்திருந்தது. யவன வணிகர்கள் அங்கே அடிக்கடி வந்தனர். ஸியூடோஸ்டமாஸ் என்ற கிரேக்க பெயர் 'பொய்முகம்' என்ற பொருள் உடையது. கொடுங்கோளூருக்கு இப்பாலுள்ள பெரியாற்றின் கடல் முகத்துக்குத் தமிழிலும் மலையாளத்திலும் இன்னும் 'அலிமுகம்' என்ற பெயர் வழங்குகிறது. கிரேக்கர் வழங்கிய பெயர் இதற்குச் சரியான பொழிபெயர்ப்பாய் அமைகிறது. இப்பெயருக்கு ஒரு காரணம் உண்டு. பருவமழைக் காலத்தில் ஆறு அடிக்கடி கடலுக்குச் செல்லப் புதுப்பாதை வகுத்துக்கொண்டி ருந்தது. கடலிலிருந்து ஆற்றைப் பிரித்து வந்த தாழ்ந்த மணல்கரை அப்போது நீர்