உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

49

அப்பாத்துரையம் - 26

துண்டிஸ் நகரம், பிரமகரா, கலைக்கரியாஸ், வாணிகக் களத்துறையான முசிரிஸ்"; ஸியூடோஸ்டமாஸ் ஆற்று முகம், பொடொபெரூரா, செம்னெ, கொரியூரா, பக்கரை, பரிஸ் ஆற்றுமுகம்:50

இவற்றையடுத்து டாலமி அயாய்5 நாட்டைக் குறிப்பிட்டு, அதிலுள்ள துறைமுகங்களைச் சுட்டிக்காட்டுறார்.

மெல்குண்டா, வாணிகக்களமான எலங்கோன் (அல்லது எலங்கோர்), தலைநகர் கொட்டியாரா, பம்மலா, கோடி முனையும் நகருமான கொமரியா52 ஆகியவை.53

உள்நாட்டு நகரங்களில் அவர் கீழ்வரும் பெயர்ப்பட்டியல்

தருகிறார்:-

உள்நாட்டு நகரங்களுள்

ஸியூடோஸ்டமாஸு

மேற்கேயுள்ளவை; நரூல்லா, கூபா, பாலூரா ஆகியவை.54

55

ஸியூடோஸ்டாமாஸுக்கும் பரிஸுக்கும் இடையேயுள்ளன : பசகெ, மஸ்தனூர், கூரெல்லூர், புன்னாடா. இங்கே கோமேதகம் உண்டு. ஆலோ, கேரொபொத்ராஸின் தலைநகரான கரூரா,5 ஆரெம்பூர் பிடெரிஸ்,பந்திபோலிஸ்,அடரிமா கொரியூர் உள்நாட்டு நகரமான அயாய் மொருண்டா" ஆகியவை.57

தமிழகத்தின் வட எல்லையை அறுதியிடுவதில் பிளினியும் டாலமியும் முற்றிலும் ஒன்றுபடுகின்றனர். மேற்குத் தீரத்தில் அதை இருவரும் துண்டிஸுக்கு (தொண்டிக்கு)ச் சற்று வடக்கிலுள்ள இடமாகக் கொள்கின்றனர். செங்கடற்பயணம் இவ்வெல்லையை இன்னும் தெளிவுபட வரையறுக்கிறது. லிமுரிகெ (அல்லது திமிரிகை) அதாவது தமிழகம் லியுகெத்தீவு அல்லது வெள்ளைத் தீவுக்குச் சற்றுத் தெற்கிலிருந்து தொடங்குகிறது என்று அது கூறுகிறது.

இத்தீவு தற்கால படகரா நகரத்துக்கு வடகிழக்காக, கரையி லிருந்து கிட்டத்தட்ட எட்டுக்கல் தொலைவில் இருக்கிறது. நாட்டுமக்கள் அதை இன்னும் தூவக்கல் அல்லது வெள்ளைக்கல் என்றே வழங்குகின்றனர். ஆனால் ஐரோப்பியர்கள் அதைப் 'பலிப்பாறை' என்றுதான் வழங்குகிறார்கள். ஏனென்றால் போர்ச்சுகீசியர் கோழிக்கோட்டில் வந்திறங்கிய காலத்தில்