உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

27

வண்ணமாக உள்ளது. குட்டுவன் (அதாவது சேர அரசன்) மலைதரும் அருந்திருவையும், கடல் தரும் அருந்திருவையும் வாரிவாரி வழங்கியவண்ணம்

வருவோர்க்கெல்லாம் ருக்கிறான்.”45

மேலைத் தீரத்திலுள்ள இன்னொரு செல்வத் துறைமுகம் தொண்டி. அது இன்று அகலப்புழை என்ற பெயருடன் ஓடும் "மாக்கலி’46 அல்லது 'பெரிய உப்புமயமான ஆற்’றின் கரையில் இருந்தது. அதுபற்றி ஒரு புலவர் குறிப்பதாவது: "பளுவேறிய குலைகள் தாங்கிய தெங்குகளால் சூழப்பட்டது அத்துறை பரந்தகன்ற நெல்வயல்கள், பசுங்குன்றங்கள், பன்னிற மலர் விரித்துப் பளிங்குநீர் பரப்பிச் செல்லும் உப்பு மணக்கும் பேராறு ஆகியவற்றினிடையே அது அமைந்துள்ளது. தற்காலக் குவிலாண்டி நகரிலிருந்து ஐந்துகல் வடக்கேயுள்ள பள்ளிக்கரை என்ற ஊருக்கு இவ் வருணனை முற்றிலும் பொருத்தமாய் அமைந்துள்ளது.

"" $47

தொண்டி என்ற பெயர் இவ்வூர் வாழ்நர்களால் இன்று முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் பழைய மரபில் வந்த பெருமகனாகிய ஊரின் செல்வமிக்க நிலக்கிழர் தொண்டிப் புனத்தில் நாயர் அல்லது தொண்டியில் குறுப்பச்சன் என்ற பெயர் தாங்குகிறார். அத்துடன் அகலப்புழையாற்றில் இன்னும் பன்னிரண்டுகல் மேல்சென்றால், குட்டியடியருகே 'தொண்டிப் போயில்' என்ற ஒரு சிற்றூர் இன்னும் இருக்கிறது. இப்பெயர் தொண்டிக்குப்போகும் வழி என்ற பொருள் குறிப்பது என்று கருத இடம் தருகிறது.

அகலப்புழையாறு முன் காலங்களில் தொண்டி அல்லது பள்ளிக்கரைவரை நீர்ப் போக்குவரத்துக்கு உகந்ததாயிருந்திருக்க வேண்டும். ஆனால் அதில் விழுந்து அதை வளப்படுத்திய கொத்தாறு வேறு திசையில் திரும்பிவிட்ட காரணத்தால், அது இப்போது அவ்வளவு தொலை நீர்ப்போக்குவரத்துக்கு உகந்ததாயில்லை.48

தமிழகத்தின் மேற்குக்கரை சார்ந்த துறைமுகங்கள், ஆறுகள் ஆகியவற்றின் கீழ்க்கண்ட பட்டியல் ‘டாலமியால்' தரப்படுகிறது: