உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

//--

அப்பாத்துரையம் - 26

உமிழும்பல் வேறுவகை இயந்திரங்கள் கோட்டையின் ஞாயில்களில் இருந்தன.

மதில் வாயில்களின்மீது

வண்சுதை பூசிய உயர்

கோபுரங்கள் பிறங்கின. அவற்றின்மீது கொடிகள் பறந்தன. மதில்களைச்சுற்றிலும் உள்ள ஆழ்ந்தகன்ற அகழியில் மனிதரைத் தின்னும் பாரிய முதலைகள் நடமாடின. நகரின் முக்கிய கட்டடங்களாக அரசன் அரண்மனை, ஆடகமாடம் அல்லது ‘பொற்கோவில்' 41 என்ற பெயருடைய திருமால் கோயில், ஒரு புத்த சைத்தியம்,42 கிழக்கு வாயிலடுத்து மதிலகத்தே இருந்த ஒரு நிகண்டத் துறவியர் மடம்43 ஆகியவை இருந்தன.

மதுரையுடன் வஞ்சியை ஒப்பிட்டால், மதுரையின் சிறப்பு அதன் பாரிய கட்டடங்களும் கோபுரங்களும் ஆகும். ஆனால் வஞ்சியோ, பொழில்வளங்களுடன் தெளிந்த நீரையுடைய வாவிகளையும், இனிய நீரோடைகளையும் சிறு தீவுகளையும், நிழல்தரும் சாலைகளையும், பூங்காக்களையும், செய்குன்றுகளையும், செயற்கை அருவிகளையும் உடையதாய்க் காண்பவர் கண்களைக் கவரும் எழிலுடையதாய் இருந்தது.

கோட்டைக்கு வெளியே சேர அரசனின் படைவீரர்கள் தங்கியிருந்தனர். சந்தடியற்ற நிழலார்ந்த சோலைகளின் நடுவே ஆங்காங்கே அறிவர்களும், துறவிகளும், தலைநகரின் ஆரவாரங் களிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துவந்தார்கள்.

944

பெரியாற்றின் கடல்வாய் அருகே முசிறி ஒரு முக்கியமான துறைமுகமாயிருந்தது. அதன் வளங்களைக் கவிஞர் ஒருவர் வருணித்துள்ளார். "திருவோங்கும் முசிறித் துறைமுகநோக்கிப் பொன்னின் வளந்தாங்கிய யவனர்களுடைய அழகிய பெரிய மரக்கலங்கள் பெரியாற்றின் நீரை உந்தி வெண்ணுரைகளை வாரி இறைத்தவண்ணம் வருகின்றன. மற்றும் ஒரு புலவர் பாடுவ தாவது:"வீடுவீடாகக் கூடைகளில் நெல்கொண்டு வரப்படுகிறது. நெல்லை வாங்கிக்கொண்டு மக்கள் பண்டமாற்றாக மீனைக் கொடுக்கிறார்கள். அத்துடன் வீடுகளிலிருந்து மிளகு சாக்குகளில் சந்தைகளுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. கப்பலிலிருந்து கொண்டுவரப்படும் தங்கத்துக்கீடாக ச்சரக்குகள் விற்கப்படு

கின்றன. முசிறித்துறையில் கடலலையின் இனிய பண் ஓயாது இசைபாடுகின்றது. தங்கம் படகுகளிலே வந்து கரையில் இறங்கிய