உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

25

வேண்டும். இப்பகுதியின் நிலம் குறிப்பிடத்தக்க வசையில் மணற்பாங்காகவே இருக்கிறது. குடம் அல்லது மேற்குப்பகுதி பெரிதும் பொன்னானி ஆற்றின் கடல்முகத்திருந்து ஏரணாகுளத் தருகிலுள்ள பெரியாற்றின் தென்கோடிக் கடல்முகம் வரையும் நீண்டிருக்க வேண்டும். பாலக்காட்டுக் கணவாய் வழியாக முதல் முதல் மலபாருக்குள் நுழைவுற்ற குடியேற்றத்தாருக்கு இதுவே தொலை மேற்கான பகுதியாகத் தோன்றியிருக்கத்தக்கது.

அது

குட்டம் அதாவது 'காயல்களின் நிலம்' தற்காலக் கோட்டயம், கொல்லம் நகரங்களைச் சூழ்ந்த பகுதியாகும். இன்றுவரை இப்பகுதியின் தாய்நில மக்களால் இப்பெயருடனேயே வழங்கப்பெறுகிறது. இப்பகுதியினூடாகப் பாலி அல்லது பாலை ஆறு ஓடுகிறது. இது கடல் முகத்தின் அருகே பல சிறு தீவுகளை உருவாக்கிக் காயல்களாகப் பரவிச் செல்கிறது. இக் காரணத் தாலேயே அது குட்டம் அல்லது காயல்களின் நிலம் என்று பெயர்பெற்றுள்ளது. குட்டத்துக்குத் தெற்கிலுள்ளது வேண். இது கிட்டத்தட்டக் குமரிமுனைவரை அளாவிக்கிடந்தது. இப் பகுதியிலுள்ள தாழ்ந்த குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் வளமான மூங்கில் காடுகளால் மூடப் பெற்றுள்ளன. வேண்நாடு அதாவது மூங்கில் நாடு என்ற இதன் பெயர் இதனால் மிகப் பொருத்த முடைய தேயாகும்.

து

குட்டத்துக்குக் கிழக்கே 'கற்கா’ அதாவது பாறையடர்ந்த பகுதி கிடக்கிறது.

மேற்கூறிய ஐந்து நாடுகளும் சேர்ந்து சேரமண்டல மாயிற்று. இதன் தலைநகர் வஞ்சி அல்லது கரூர் ஆகும்.38 அது பெரியாற்றின் கரையில், ஆனால் அதன் கடல் முகத்திலிருந்து நெடுந்தொலைவில், மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தருகில் அமைந்திருந்தது. நகர் இருந்த இடம் இன்று திருக்கரூர் என்ற பெயருடைய ஒரு பாழ் அடைந்த சிற்றூர். அது கொச்சிக்குக் கிழக்கே வடக்குச் சாய்வாக, 28 கல் தொலைவில் உள்ளது.இங்கே ஒரு பழைய கோவில், வேறுசில பாரியகட்டடங்கள் ஆகியவற்றின் அழிதடங்கள் காணப் பெறுகின்றன.3 நகரம் முன்பு வலிமை வாய்ந்த கோட்டை கொத்தளங் களுடையதாயிருந்த தென்று தெரிகிறது.4 கோட்டையைத் தாக்குபவர்கள்மீது ஏறிபடைகள்