உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 26

(24) || வாழ்க்கை நடாத்திய வர்களும் பாணர் முதலிய ஊ ழிய வகுப்பினரும் தங்கிவாழ்ந்தனர்.32

மதுரைக்கு மேற்கே முருகக்கடவுளுக்குத்33 திருவிடமான பரங்குன்று என்ற மலை இருந்ததாக நக்கீரர் குறிப்பிடுகிறார். இம்மலை இன்றைய மதுரையிலிருந்து தென் மேற்கில், ஆனால் பாழ்பட்ட பழைய நகரிலிருந்து மேற்கிலேயே இருக்கிறது. தலைநகருக்குக் கிழக்கே மற்றொரு மலை உண்டு. அதில் திருமால் இடங்கொண்ட கோயில் ஒன்று இருந்தது. இதில் மூன்று நறுஞ் சுனைகள் இருந்தன. திருமாலடியவர்களால்34 இவை புண்ணிய தீர்த்தங்களாகக் கொள்ளப்பட்டிருந்தன. மதுரையிலிருந்து (தற்போது திருச்சிராப்பள்ளியின் ஒரு பேட்டையாயிருக்கும்) உறையூர் செல்லும் பாதையில் சிறுமலை என்ற குன்றுத்தொகுதி இருந்தது. இங்கே மாவும் பலாவும், கமுகும் தெங்கும் நிறைந்து வளர்ந்தன. உள்ளியும் மஞ்சளும், மஞ்சளும், கம்பும் சாமையும், மலையரிசியும் இனிய கிழங்கு வகைகளும், வாழையும் கரும்பும் வளமாகப் பயிராயின3

35

பாண்டியநாட்டின் எல்லைகளைப்பற்றியோ, தமிழகத்தின் உறுப்புக்களாகிய மற்றப் பன்னிரண்டு நாடுகளின் இட அமைப்பு, எல்லை ஆகியவற்றைப்பற்றியோ பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளில் எத்தகைய சான்றுகளும் கிட்டவில்லை. உரை யாசிரியர்கள் தரும் விவரங்களோ முற்றிலும் ஒன்றற்கொன்று முரண்பட்டவையா யுள்ளன. நாட்டின் பண்டைநில நூல்பற்றித் தமிழ் ஆசிரியரே எதுவும் தொடர்பாகத் தந்திராதநிலையில், 'செங்கடற் பயணம்' என்ற கிரேக்க நூலிலும் பிளினி, டாலமி ஆகியோர் நூல்களிலும் கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு நாம் புதுவதுபுனைந்து புத்தாராய்ச்சி செய்ய வேண்டியதாயுள்ளது.

அரபிக்கடலை ஒட்டி லை ஒட்டி வடக்கிருந்து தெற்காகக் கீழ்வரும் வரிசைமுறையில் நான்கு நாடுகள் அல்லது மண்டலங்கள் இருந்தன. அவையாவன : பூமி, குடம், குட்டம், வேண்.37 இப்பெயர்கள் அவ்வப் பகுதியின் நில இயல்புக்கு இசைய அமைந்திருந்தன. பூமி அல்லது 'மணற்பாலைப்பரப்பு' பெரும்பாலும் தற்கால அகலப்புழை ஆற்றின் கரையிலிருந்து பொன்னானி ஆற்றின் கடல்முகம்வரை பரந்து கிடந்திருக்க