உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

23

நகரின் மிக முக்கியமான தெருவீதிகள் அரசவீதி, கடைவீதி, கணிகையர்வீதி, பொற்கொல்லர் வீதி, கூல வாணிகர் வீதி, அறுவை வாணிகர் வீதி,மணிவாணிகர் வீதி முதலியவை நகரின் கட்டடங்களில் மிகச் சிறந்தது 'வெள்ளியம்பலம்' (வெள்ளி யாலான கோயில்)27 என்ற பெயருடைய நகரின் சிவன்கோயிலே. இதுதவிர, திருமால், பலதேவன், முருகன், சிந்தாதேவி28 ஆகிய பிற தெய்வங்களுக் குரிய கோயில்களும், புத்த, பார்ப்பன, நிகண்டத் துறவிகளுக்குரிய தனித்தனி மடங்களும்” இருந்தன.

அக்காலத் தமிழக நகரங்களில் புகழ்மிக்கதும் முதன்மை வாய்ந்ததும் மதுரையே என்பதில் ஐயமில்லை. தமிழ் மன்னருள் ஆற்றல் மிக்கவர் என்றும், புலவர்களின் ஒப்புயர்வற்ற புரவல ரென்றும் பெயரெடுத்த பாண்டியரின் தலைநகர் அது. இது தவிர, தமிழகத்தின் மற்ற நகரங்களிலிருந்து அதை வேறுபடுத்திய மற்றொரு சிறப்பும் அதற்கு இருந்தது. இதுவே, அதன் வாயில்களின்மீது எழுந்த வானளாவிய கோபுரங்களின் சிறப்பு ஆகும். இது காரணமாக அது பொதுவழக்கில் 'நான்மாடக் கூடல்' அதாவது ‘நான்கு கோபுரங்களின் இணைப்பு' என்று சுட்டப்பட்டது. இத்தொடர் சில சமயம் 'மாடக் கூடல்' என்றும் ‘கூடல்' என்றும் சுருக்கி வழங்கப்பட்டது.30

இந்தப் பண்டை மதுரை அல்லது கூடல் இருந்த இடம் தற்கால மதுரை நகரத்துக்குத் தென்கிழக்கே ஆறுகல் தொலைவில் பாழடைந்து கிடக்கும் பழ மதுரை (பழைய மதுரை) யாகவே இருத்தல் கூடும். இந்தப் பாழ்நகர் வைகையில் வடகரையில் இருக்கிறது. ஆனால் பண்டை மதுரை அதன் தென்கரையில் இருந்ததாகவே அறிகிறோம். ஆயினும் நகரின் அழிவுக்குப் பிற்பட்டு ஆறே போக்குமாறித் திசைமாற்றம் உண்டுபண்ணியிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.

சங்ககாலத்திலேயே மதுரைக்கு வைகையால் அழிவு நேரக்கூடும் நிலை இருந்நதென்று அறிகிறோம். பாண்டியனைப் பாராட்டியபோது தமிழ்ப் புலவர்கள் கூறிய சொற்களால் இதனை உய்த்துணரலாம். “வெள்ளப் பெருக்குற்ற வைகையா லன்றி வேறெந்த எதிரியின் முற்றுகையையும் அறியாத மதில்சூழ் நகரின் காவலனே!'3 என்று அவர்கள் பாண்டியனை முன்னிலைப் படுத்தினர். மதுரைக் கோட்டைக்கு வளியே சமய அறமுறை