உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 26

கியிருந்தது. இதுவே தமிழகத்தின் உயிர்நிலையான பகுதியாகக் கருதப்பட்டது. தூய செந்தமிழ் பேசப்பட்ட இடமாக அது மதிக்கப்பட்டது.

19

இந்நாட்டின் முக்கிய நகரம் பாண்டியர் தலைநகரமாகிய மதுரையே. மகாபாரதக் காவியத் தலைவர்களான பாண்டு மரபினரின் வடபுல நாட்டுத் தலைநகராக யமுனைக்கரையிலிருந்த திருநிலை பெற்ற மதுரையின் பெயரைப் பின்பற்றியே அது அப்பெயரடைந்த தென்று தோற்றுகிறது அந்தக்காலத்துக் தமிழ்க் கவிஞர்களின் வழக்காற்றில் அது தக்கண மதுரை அல்லது தென்மதுரை2” என்று குறிக்கப்பட்டதே இதற்குச் சான்று பகரும். பாண்டியனுக்கே பஞ்சவன் (ஐவர்மரபினன்), கொளரியன்22 (குருமரபில் வந்தவன்) என்ற பெயர்கள் உண்டு. ஐவர் உடன்பிறந்தாராயிருந்த பாண்டவரின் மூலமரபை இப்பெயர்கள் கட்டிக்காட்டுகின்றன.

மதுரைமாநகரம்

ன்றளவும்

தன் பண்டைப் பெயருடனேயே நிலவுகிறது. வடமதுரையில் ஆண்ட பாண்டு மரபினர் மிகமுற்பட்டகாலத்திலேயே தீவக்குறையின் தென்கோடி முனையிலும்23 தங்கள் ஆட்சியை நிறுவியிருந்தனர் என்பதற்கு இது ஓர் உயிர்ச்சான்றாகும்.24

மதுரை கோட்டைகொத்தளமுடைய ஒரு நகரம். கோட்டைக்கு நான்கு வாயில்களும் உயர்ந்த கோபுர மாடங்களும் இருந்தன. கரடுமுரடாக வெட்டப்பட்ட கற்களால் மதில் புனைந்தியற்றப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் ஆழ்ந்த அகழியும், அகழிக்கப்பால் அடர்ந்த முள் மரக்காடும் இருந்தன. வாயில் களிநூடாகச் சென்ற வழி பாதைகள் பல யானைகள் அருகருகாகச் செல்லத்தக்கனவாய் விரிவகலமுடையனவாய் இருந்தன. வாயிலின் இரு புற மதில்களின்மீதும் பல்வகைப்பட்ட படைக்கலங்களும் எறிபடைக் கருவிகளும் எதிரிகள்மீது எளிதில் எடுத்து வீசத்தக்க நிலையில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தன.

வாளுருவிய யவனவீரர் கோட்டைவாயிகளைக் காத்தனர்.2 25 வாயில்கள்மீதும் மதில்கள்மீதும் போரில் கைக்கொள்ளப்பட்ட பல்வகைக் கொடிகள் பறந்தன.