உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

21

பகுதியிலுள்ள கங்கை என்ற கடற்றுறைமுக நகரம்; வாரணவாசி அல்லது தற்காலக் காசிமாநகர்; குஜராத்தில் தெய்வமாகக் கருதப்பட்ட கிருஷ்ணன் தலைநகரமாகிய துவரை அல்லது துவாரகை" ஆகியவை.

இலங்கை அன்று இலங்காதீவம் அல்லது இரத்தின தீவம் என்ற பெயரால் இலங்கிற்று. அத் தீவின் உயரமிக்க மலை ‘சமனொளி’12 என்றழைக்கப்பட்டது. (இது இன்று ஆதம் கொடுமுடி என்று வழங்குகிறது). அதன் முகட்டில் புத்தர் அடிச்சுவடுகளின் தடம் இருந்தது. தூராதொலைவுகளிலிருந்து வரும் புத்தசமயத்தவரின் புண்ணிய யாத்திரைக்குரிய இ அது விளங்கிற்று.

டமாக

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மணிபல்லவம் என்ற தீவு இருந்தது. அதில் விளங்கிய புத்தபீடிகை புத்த உலகத்தின் பூசனைக்குரிய புண்ணியதலங்களுள் ஒன்றாய் இருந்தது. இது காவிரியின் கடல் முகத்திலிருந்த பண்டைத் துறைமுகமாகிய புகாரிலிருந்து முப்பது யோசனைத் தொலைவி லிருந்ததாகக் குறிக்கப்படுகிறது.13 மதுரைப் பகுதியிலுள்ள கடற்கரையிலிருந்து சாவகம்4 செல்லும் கப்பல் மணிபல்லவத்தி னூடாகவே சென்றது.!5

இலங்கைக்குக் கிழக்கேயுள்ள தீவுகளில் ‘நக்கசாரணர்’ அதாவது ‘அம்மணமான நாடோடிகள்' என்ற பெயருடன் மனிதரைத் தின்னும் மனித இனத்தவர் வாழ்ந்தனர்.16 இத்தீவு களுக்கப்பால் சாவகம் என்ற பெருநிலம் கிடந்தது.அதன் தலைநகரம் நாகபுரம். இந்நாட்டின் அரசன் தன்னை இந்திரன் மரபினன் என்று குறித்துக் கொண்டான். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இச் சாவகம் அன்று தமிழே பேசப்பட்டதாகத் தெரிகிறது. சாவகம் என்று இங்கே குறிக்கப்பெறுவது பெரும்பாலும் சுமாத்ராத் தீவாகவோ, ஜாவாத் தீவாகவோதான் இருக்கவேண்டும்?

தமிழகம் 13 நாடுகள் அல்லது மண்டலங்களாகப் பிரிவுற்றி ருந்தது. அவற்றின் பெயர்களாவன : பாண்டி, தென்பாண்டி, குட்டம், குடம்,கற்கா, வேண்,பூமி,பன்றி,அருவா, அருவா-வடதலை, சீதம், மலாடு, புனனாடு ஆகியவை. இவற்றுள் பாண்டிநாடு கிட்டத்தட்ட தற்கால மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளடக்