உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. தமிழகத்தின் நில இயல் பிரிவுகள்

ஆசியாவின் நடு மேட்டுநிலத்துக்குத் தெற்கிலுள்ள மாநில முழுவதும் முன்னாட்களில் சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்பட்டது. நாவல்மரங்கள் அதில் மிகுதியாய் இருந்தன என்பதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டிருத்தல் கூடும். இந் நாவலந்தீவில் விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி தட்சிணாபதம் அல்லது தென்னாடு' என்றும், அதன் தென்கோடியில் தமிழர் வாழும் இடம் தமிழகம் என்றும் அழைக்கப்பெற்றது.2 இத் தமிழகத்தின் பழைய எல்லைகள், வடக்கே வேங்கடமலை,3 தெற்கே குமரிமுனை, கிழக்கே வங்கவிரிகுடா, மேற்கே அரபிக்கடல் ஆகியவை.

மலையாளம் அந்நாட்களில் ஒரு தனி மொழிவகையாக உருவாகவில்லை. கீழ்கடலுக்கும் மேல்கடலுக்கும் இடையே தமிழ் என்ற ஒரு மொழிதான் பேசப்பட்டது.

வேங்கடத்துக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் வடுகர் என்று அழைக்கப்பட்டனர்.4 தமிழக எல்லையடுத்து வடக்கே மேற்கு மலைத் தொடருக்கு அப்பால் இருந்த பகுதி எருமை நாடு5 அதாவது எருமைகள் நிறைந்த நாடு எனப்பட்டது. இதற்குச் சரியான சமஸ்கிருதப் பெயர் மஹிஷமண்டலம் என்பது. எருமைநாட்டுக்கு மேற்கில் துளுநாடு, குடகம், கொண்காணம் ஆகியவை கிடந்தன. இந்தியாவில் இவ்வெல்லைகளுக்கப்பால் அந்நாளிலிருந்த மக்களி னத்தவர் கலிங்கர், பங்களர், கங்கர், கட்டியர், வடஆரியர்” முதலியவர்கள்.

6

தமிழகத்துக்கு வெளியில் தமிழ்க்கவிஞர்களால் கட்டப்படுகிற முக்கியமான நாடு நகரங்கள் வருமாறு: மகதநாடு, புத்தர் பிறப்பிடமான கபிலை; மாளவநாடு, அதன் தலைநகர் அவந்தி; வச்சிரநாடு, கங்கை ஆற்றங்கரையில் கன்னர் ஆட்சிப்