உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

19

48. திரு. ஹியூ. நெவில் (Mr. Hugh Nevill) இலங்கை உள்ளாட்சி அரங்கப் பொறுப்புடையவர் (Ceylon Civil Service). அவரே "தாப்ரோபேனியன்' பத்திரிகையின் ஆசிரியரும் ஆவார். (குறிப்பு. இலங்கையின் பழம்பெயர்களில் ஒன்று தாப்ரோபேன் அல்லது தாம்பிரபர்ணி). இம் மரபுரையை விரித்துரைக்கிற பல கதைகளும் கதைப் பாடல்களும் இலங்கையில் இன்றும் உயிர்ப்புடன் உலவுகின்றன என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். அத்துடன், இராஜாவளி, அப்ஹாமின் மொழிபெயர்ப்பு (Upham's Translation), இயல் 35, பக்கம் 228 இராஜரத்னாகரி பக்கம் 57 டானரின் "இலங்கை வரலாற்று மணிச்சுரு க்கம் (Turnour's Epitome of the History of Ceylon), பக்கம் 21 ஆகியன காண்க. கலிங்கத்துப் பரணி. லெய்டன் பட்டயம்.

49.