உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36.

18

அப்பாத்துரையம் - 26

அகம். பாட். 55,124,306 இந்நூல் இன்னும் அச்சில் வெளிவரவில்லை. (ஆசிரியன் இக்குறிப்பு 1904 ஆம் ஆண்டையது)

37. பதிற்றுப்பத்து: பாட்டு 51-60. இந்நூலும் அச்சுருவில் வெளிவரவில்லை. (மேலே அடிக்குறிப்புக் காண்க.)

38.

39.

சிலப்பதிகாரம்: 20. 11-15, 29. 1-3.

இமயவரம்பன் என்ற தொடர் செங்குட்டுவன் தந்தையாகிய நெடுஞ்சேரல் ஆதனுக்குரியதாகவே பெரும்பாலும் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நூலாசிரியர் எக்காரணத்தாலோ அதைச் செங்குட்டுவன் சேரனுடன் இ ணைக்கிறார். இளங்கோவடிகள் செங்குட்டுவன் இளவல் என்ற செய்தியும் இக்காரணத்தால் அடிக்கடி இமயவரம்பன் இளவல் என்று குறிக்கப்பட்டு விடுகிறது.

40. இக்காவியம் நல்லார்க்கினியர் உரையுடன் 1892-இல் திருசாமி நாதையரால் வெளியிடப்பட்டிருந்தது. (அடியார்க்கு நல்லார் என்ற சரியான பெயரை ஆசிரியரே பின்னால் குறிப்பிடுகிறார்) ஆசிரியர் பெயர் தரப்படவில்லை. ஆனால் அரசத் துறவி என்ற பொருளுடைய இளங்கோவடிகள் என்ற தொடரால் அவர் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார். காவியத்தின் பதிகம், அதாவது முன்னுரையில் முதல் அடியில் ஆசிரியர் குணவாயில் கோட்டத்தில் (கீழைவாசல் கோயிலில்) துறவியாக வாழ்ந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.

41. சிலப்பதிகாரம்: பக்கம் 31: அத்துடன் 30. 160: பார்க்க.

42.

43.

44.

மகாவம்சோ, தீபவம்சோ, ராஜாவளி, ராஜரத்னாகரீ.

கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராஜராஜசோழனுலா.

தற்போது ஹாலந்தில் லெய்டன் நகரில் பேணிவைக்கப்பட்டுள்ள செப்புப் பட்டயங்கள். இவை நாகபட்டினத்திலுள்ள சூடாமணி விகாரத்துக்கு (புத்த பள்ளிக்கு) உரியவை. டாக்டர் பர்கெஸ் (Dr. Burges): தென் இந்தியப் பழம் பொருளாராய்ச்சித்துறை அறிவிப்புக்கள். ஏடு 4: பக்கம் 204 பார்க்க. இவற்றுடன் வீரநாராயண சோழன் ஆட்சிக்காலத்திய உதயேந்திரமங்கலம் மானியப் பட்டயங்களும் காண்க. சேலம் மாவட்டக் கையேடு: பக்கம் 369 காண்க.

45. இவனுக்குப் பிற்பட்ட கரிகால சோழரும் இருந்தனர்.

46. சந்திரகுப்த மௌரியன், மௌரிய மரபின் தோற்று முதல்வன், முதலரசன்.

47.

Seleucus Nicator: பேரரசன் அலெக்ஸாண்டரின் படைத்தலைவன். அவருக்குப்பின் ஸிரியாவில் அவர்பின் மரபினனாய், சந்திரகுப்த மௌரியன் காலத்தில் மகதத்தின் மீது படையெடுத்து, தோல்வியின் பின் தன் புதல்வியை அவனக்கு மணம் செய்வித்து அவனுடன் மண உறவு கொண்டவன். பண்டை இந்தியாவைப்பற்றி விரித்தெழுதிய மெகஸ்தனிஸ் மகத நாட்டில் வந்து தங்கியிருந்த அவன் தூதனே.