உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

|-

அப்பாத்துரையம் - 26

60

குடியுரிமை யுடையவராக மதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தென்பாண்டி நாட்டையும் சோழ நாட்டையும் தாக்கிப் படையெடுத்தார்கள். ஆனால் மன்னர் திதியனும்,எ கிள்ளியும்62 அவர்களை முறியடித்துத் துரத்தினர்.

கோசர் என்பவர் குஷான்களேயன்றி வேறல்லர். இவர்களில் ஒரு கிளை கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் பாக்டிரியாவையும், கி.மு. 1-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியையும் வென்று கைக்கொண்டார்கள். அவர்கள் யூச்சி மரபின் நான்கு கிளைகள். அதாவது ஆசியாய், பசியனாய்,தாக்கராய், சகரொலாய்3 ஆகியவற்றின் தலைவர்கள் ஆவர்.64 அவர்கள் பெருந்தெய்வம் சிவபெருமான். கனிஷ்கனின் நாணயங்களிலிருந்து இதைக் கண்டுணரலாம்.66

.65

தென் இந்தியாவிலுள் தமிழகக் குடியேற்றத்தார் தனித்தனி மரபினராக, வெவ்வேறு நீண்ட இடையீடுடைய காலங்களில் வந்ததனாலும், தொகையில் பழங்குடியினரான நாகர்களையும் திராவிடர்களையும் விட மிகக் குறைந்தவர் களாயிருந்த தனாலும், அவர்கள் பழைமை வாய்ந்த திராவிட மொழியையே மேற்கொள்ள நேர்ந்தது. நாளடைவில் அவர்கள் அதை மாற்றித் திருத்தம் செய்து இப்போது தமிழ் என்று அழைக்கப்படும் மொழியாகச் செப்பம் செய்தார்கள். ஏனைத் திராவிட மொழிகளிலோ சமஸ்கிருதத்திலோ இல்லாத சிறப்பொலியான 'ழகரம்' இத்தமிழ்க் குடியேற்றத்தாரால் கொண்டுவரப்பட்டதே யென்பதில் ஐயமில்லை. இவ்வெழுத்துத் திபெத்திய மொழிகள் சிலவற்றிலேயே இடம்பெற்றுள்ளன என்று அறிகிறோம். தமிழ்க் குடியேற்றத்தாரின் மூலத் தாயகம் திபெத்திய மேட்டு நிலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

அவர்கள் ஆரிய மரபுத் தொடர்புடையவர்களல்ல என்பதில் ஐயமில்லை. இதற்கு ஆரியர் வகையில் அவர்கள் தொடர்ந்து காட்டி வந்த எதிர்ப்புணர்ச்சியேன்றிப் பிறசான்றுகளும் உண்டு. பண்டைய சமஸ்கிருத நூல்களில் திராவிடர் ஓர் அயலின மக்களாகவே குறிக்கப்படுகின்றனர்.69

ஆரியர் வருமுன்பே தமிழினத்தவர் உயர்படி நாகரிகம் அடைந்திருந்தனர். இதைத் தமிழ்மொழியே உறுதியாக நிலை நாட்டப் போகிறது. தூய தனித்தமிழ்மொழி சமஸ்கிருதச்