உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

66

83

'பெயர் ஒற்றுமை ஒன்றில் மட்டும் எதுவுமில்லை என்றே நானும் எண்ணூகிறேன். ஆனால் சிற்ப ஒற்றுமையுடன் பழக்க வழக்க ஒற்றுமைகளையும் சேர்த்தால் தொடர்பில் எனக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுகிறது.

"53

திரு. ஃவெர்குஸலின் கலைத்துறை இயற்கை யுணர்வு சுட்டிக்காட்டிய இன ஒற்றுமை பண்டைத் தமிழ்க் கவிஞர்களின் சான்றினால் உறுதி பெறுகிறது. நேபாளத்துக்கும், மலபாருக்கும் இடையேயுள்ள தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இணைப்பறுபட்டுப் போன ஒன்றாகும். இந்நிலையில் அதன் சின்னங்கள் பின் கூறப்பட்ட நாட்டின் மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் சிற்ப முறைகளிலும் இருபது நூற்றாண்டுகள் கழிந்து இன்றும் நிலவுவது வியப்புக்குரிய செய்தியேயாகும்!

ம்ரான்மர், திரையர், வானவர் ஆகிய மூன்று தமிழ் மரபினரும் பாண்டிய, சோழ, சேர அரசுகளென்று பின்னாட்களில் வழங்கிய அரசுகளை நிறுவினர்.54 கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட மகதப் பேரரசன் அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து மூன்று தமிழரசுகளும் அவன் காலத்திலிருந்தன என்றும், அவன் ஆட்சியுரிமைக்கு அவை உட்பட்டிருக்கவில்லை யென்றும் அறிகிறோம்.55

56

தமிழகத்தில் குடி புகுந்தவருள் கடைசியானவர் கோசர்கள். அவர்கள் பழையன் மாறன் தலைநகரான மோகூரைத் தாக்கினார்களென்றும், அதில் முறிவுற்றதன் காரணமாக, வம்பமோரியர் அதாவது முறைகெட்ட மோரியர் அவர்கள் உதவிக்கு வந்து பொதிய மலைமீது தங்கள் அணிநெடுந்தேரை ஓட்டினர் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து கோசரின் குடியேற்றம் கி.மு. 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தென்று தோற்றுகிறது. ஏனெனில் அப்போதுதான் முறை கேடான மோரியர் மகதத் தவிசேறினர். கோசர் நான்கு வெவ்வேறு நகர்களிலிருந்து வந்ததனால் நாலு வெவ்வேறு மொழிகளைப் பேசினர் என்று கூறப்படுகிறது.57 அவர்கள் வீரமிக்கவர்கள். வாய்மையின் மதிப்பில் அவர்கள் பேர்போனவர்கள்58 முதல் நூற்றாண்டில் அவர்கள் கொங்கு நாட்டையே (தற்காலக் கோயமுத்தூரையே) ஆண்டார்கள்59. பாண்டியர் ஆட்சியில் அவர்கள் பழையன்மாறன் ஒருவனுக்கே அடுத்தவரான தலைசிறந்த