உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

|-

அப்பாத்துரையம் - 26

கொண்டவனாய் அவர்கள் உதவியுடன் இமயமலையருகிலுள்ள ஆரியர்களை எதிர்த்துத் தாக்கினான்49. மாட்சிமிக்க ஆந்திரர் குடியைச் சேர்ந்த கர்ணர்கள் கிறிஸ்தவ ஊழியின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் மகதத்தை ஆண்டார்கள். அவர்கள் மூன்று கலிங்கங்களின் கோமான்களாயிருந்தனர் - அவை இப்பால் தெலுங்கு நாட்டையும் வங்க விரிகுடாவுக்கு அப்பால் வங்கம் கடந்து அரக்கானையும் உட்கொண்டவையாயிருந்தன:50

கட்ட டடக் கலை ஆராய்ச்சிப் பேரறிஞரான திரு. ஃவெர் குஸன் தென் கன்னடத்திலும், மலபாரிலும் உள்ள சிற்பத்துக்கும் நேபாளத்திலுள்ள சிற்பத்துக்கு மிடையேயுள்ள வியத்தகு பொருத்த த்தைக் கூர்ந்து நோக்கிக் கீழ்வருமாறு எழுதினார்:-

66

'வடக்கிலுள்ள முறைகளுடன் மிக நெருக்கமான தொடர்புடைய கூறு இங்கே தாழ்வாரங்களுக்கு மேலுள்ள மோட்டின் இறைவாரங்களே யாகும். நேபாளத்துக்குத் தெற்கே வேறெங்கும் இவ்வொற்றுமை இருப்பதாக எனக்குத் தெரிய வரவில்லை. அது மிகத் தனிப்பட்ட முறையாயிருப்பதால், அது பார்த்துப் பின்பற்றத் தகுவதேயன்றி மறுமுறை மீண்டும் புதுவதாகக் கண்டு புகுந்தது என்று கூற இயலாதது. ஆனால் நேபாளத்துக்கும் திபெத்துக்கும் கன்னடத்துக்கும் இடையே எப்போது, எவ்வாறு, எத்தகைய தொடர்பு ஏற்பட்டிருந்தது என்பது பற்றித் தொலை நேர்வான எத்தகைய ஊகத்தையுங் கூட என்னால் குறிக்கமுடிய வில்லை. ஆனால் அத்தகைய தொடர்பு இருந்திருக்கவேண்டு மென்பதில் ஐயமில்லை.”

அவர் மேலும் குறிப்பிடுவதாவது:

66

நாயர்கள்,

ரு

உண்மையில் (மலபாரைச் சார்ந்த) (நேபாளத்தைச் சார்ந்த) நேவர்கள்52 ஆகிய ந்த மரபினர்களையும் போல, புத்தார்வமூட்டும் சுவைகரமான பொது இனக் கூறுகளையுடைய வேறு இரண்டு இந்திய இனங்களைக் குறிக்க முடியாது. ஏனெனில் பெண்கள் கற்பு நெறி பற்றிய ஒரு விசித்திரக் கோட்பாடு இருவருக்கும் பொதுவாக உள்ளது. சிற்ப முதலிய பிற தனிப்பட்ட பண்பாடுகளின் ஒற்றுமையுடன் இதனை இணைத்தால், இருவரின் பொது இனத் தொடர்பு மிகவும் வலியுறவு பெறுகிறது.”