உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

81

நாகர்களை வென்ற முதற்சோழ அரசன் முசுகுந்தனே என்பது பற்றி ஐயம் எதற்கும் இடம் இல்லை. திரையரின் சமஸ்கிருதப் பெயர் சாகரகுலர் என்பதே. தொண்டை நாட்டின் பண்டை அரசர் சாகர குலத்தினரே. ஆனால் பிற்காலப் பல்லவர் தம்மைப் பாரத்துவாஜ கோத்திரத்தினர் என்று குறித்துக் கொண்டனர்43. கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரையில்கூட (தற்காலச் செங்கற்பட்டு, வட ஆற்காடு மாவட்டங்களைச் சார்ந்த), தொண்டை மண்டலப் பகுதியில் வாழ்ந்த திரையர் குடியினர் கீழ்வரும் பெயர்களுடன் விளங்கினர்.44

பங்கள திரையர் - வங்கத்துக்குரிய திரையர்.

சீன திரையர் - சீனாவுக்குரிய திரையர் - இங்கே சீனா என்பது பெரும்பாலும் கொச்சின் சீனவாகவே இருக்கக்கூடும் கடார திரையர் கடாரம், அதாவது பர்மாவுக்குரிய திரையர்

-

சிங்கள திரையர் - இலங்கைக்குரிய திரையர்.

பல்லவ திரையர் - பல்லவத்துக்குரிய திரையர்.

தமிழரின் இன்னொரு மரபினர் வானவர் அல்லது வானகத்துக்குரியவர். இவர்கள் பெரும்பாலும் வங்கத்துக்கு வடக்கிலுள்ள ஒரு மலை நாட்டுப் பகுதிக்குரியவராயிருக்க வேண்டும். ஆகவே தென் இந்தியாவில் தங்கியபோதும் அவர்கள் கொல்லிமலை (சேலம் மாவட்டம்), மேற்குத் தொடர், நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் தங்கள் வாழ்வகத்தை வகுத்துக் கொண்டனர். அவர்கள் இமய மலையில் வாழ்ந்த வானவருடன் உறவு கொண்டாடினர்.45 இந்தப் பிறப்புத் தொடர்பைக் குறிக்கும் முறையில் அவர்கள் வானவரம்பன் அல்லது இமயவரம்பன் என்ற பட்டத்தை மேற்கொண்டனர்.46

சேர அரசர்களேயன்றி முதிரமலைக் கோமான் நன்னன்47. அழும்பில்வேள்48 ஆகிய பிற மலைப்பகுதித் தலைவர்களும் தங்களை வானவிறல்வேள் அல்லது வானவர்கோமான்கள் என்று குறித்துக் கொண்டனர்.

சேர அரசர்களில் ஒருவனான செங்குட்டுவன் மகதப் பேரரசராகிய கர்ணர்களுடன் மிக நெருங்கிய நட்புத் தொடர்பு