உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

97

வேண்டுமானாலும் இதனிடம் சொல். நான் உடனே வருவேன்'

என்றது.

பாம்பின் நன்றியுணர்வு அவன் உள்ளத்தை உருக்கிற்று. ஆனால், அவன் மகிழ்ச்சியடைய முடியவில்லை.

பச்சைக்கிளி அவனைத் தன் கூட்டருகே அழைத்துப் பாலும் பழமும் தந்தது. அத்துடன் ஒரு மலரை அவன்முன் வைத்தது. “என்னால் தரத்தக்க பரிசு இது ஒன்று தான். வயது து சென்ற எவர் தை முகர்ந்தாலும், இளமையுடையராவர், அத்துடன், எப்போதாவது என் உதவி உனக்குத் தேவைப் பட்டால், இதனிடம் சொல்லு, நான் உடனே வருவேன்” என்றது.

பச்சைக்கிளியின் சொற்கள் அவன் செவியில் ஏறவில்லை. அதன் அன்புரைகள் அவனைப் பாகாய் உருக்கிற்று. ஆனால், அவன் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவன் தன்னை மறந்து அம்மலரைத்தன் மேலாடையில் முடிந்தான். "சேந்தனைப் பிழைப்பிக்கும் வகையை வீணாகக் கெடுத்து, செந்திலாண்ட வனுக்கும் துரோகம் செய்துவிட்டோம்" என்று அவன் வருந்தினான்.

குரங்கு அவன்முன் ஓர் அருநெல்லிக் கனியை வைத்தது. "என்னால் தரத்தக்க பரிசு இதுதான். இதைக் கையில் வைத்துக் காண்டு, செத்துப் போனவர் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள். அத்துடன் உனக்கு எப்போது என்ன வேண்டுமானாலும் என்னை நினை; நான் வருவேன்" என்றது.

குரங்கின் பேச்சை அவன் காதுகள் வாங்கவே இல்லை. அவன் கைகள் அவனை அறியாமல் அவ் வருநெல்லிக்கனியை அவனுடைய சம்புடத்தில் வைத்துக் கொண்டன.

ஆண்டியைக் கண்ட மண்டபத்தில் வந்து அவன் ஓர் இரவு அங்கே தங்கினான்.

ஆ ண்டியை அங்கே காணவில்லை. ஆனால், ஒரு காசுமாலை அங்கே கிடந்தது. அதிலுள்ள பச்சை, சிவப்பு வெள்ளைக் கற்கள் எங்கும் ஒளி வீசின. அவன் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.