உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

77

கி.பி.

மகாலமனா அல்லது மல்லகநாகர்

125

குகனா அல்லது சந்தநாகர்

173

குடனாமா அல்லது குடநாகர்

183

குடசிரீனா அல்லது சிரீநாகர்

184

பரதவர் கடற்கரையில் வாழ்ந்து மீன்பிடிப்பதாலோ, கடல் வாணிகத்தாலோ வாழ்க்கை நடத்திய நாகவகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும், சங்கும், எடுக்கக் கடலில் மூழ்கினர். அத்துடன் மூழ்குமிடத்தில் சுறாக்கள் வராமல் தடுப்பதற்குரிய மந்திரமும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமைமிக்கவர் களாய் இருந்தார்கள். மீனும் ஊனும் உண்டு அவர்கள் வலிமை வாய்ந்தவர்களாயிருந்தனர். விற்படை ஏந்தி அஞ்சாத் தீரங்காட்டிப் போரிட்டதனால், எதிரிகளுக்கு அவர்கள் அச்ச மூட்டினர்.24

நாகர்கள் பல கலைகளில் திறமையுடையவர்கள். சிறப்பாக நெசவு அவர்கள் தனித்திறமாய் இருந்தது. இக்கலையில் கலிங்க நாட்டு நாகர் மிகப் புகழ்பெற்வர்களாயிருந்ததனாலேயே, தமிழில் கலிங்கம் என்ற சொல் ஆடையைக் குறிக்க வழங்கிற்று. நம் ஆராய்ச்சிக்கு உட்பட்ட காலத்தில் பாண்டிநாட்டின் கீழ்கரை யிலுள்ள நாகர்கள் மிகச் சிறந்த நெசவாளராய் இருந்தனர். ஆடை களையும் மல்மல்போன்ற மெல்லாடைகளையும் அவர்கள் பேரளவில் ஏற்றுமதி செய்தனர். நாகர்களால் நெய்யப்பட்ட இந்த உயர்தர மல்மல் ஆடைகள் தமிழரால் மிகவும் பாராட்டப் பட்டிருந்தது. அயல்நாடுகளில் அது வியக்கத்தக்க மிகப் பெருவிலை அளித்தது.25 நீலநாகர்களால் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இத்தகைய விலையேறிய மல்மல் ஆடைகளுள் ஒன்றை ஆய் என்ற பேர்போன வள்ளல் சிவபெருமான் சிலைக்கு அளித்ததாகத் தமிழ்க் கவிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.26

ஆரியர்கள் எழுத்துக்கலையை முதல் முதல் கற்றது நாகர் களிடமிருந்தேயாகும். சமஸ்கிருத எழுத்துக்கள்27 இன்றளவும் இக்காரணத்தினாலேயே தேவநாகரி என்று அழைக்கப்

படுகின்றன.