உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

“கடலின் ஆங்கண் அகத்தியன் ஆணையால் திடங்கொள் தாளில் திரைகளை எற்றியே

அடங்கொண் டேமுகில் வண்ண மளாவிவான் இடங்கொள் வில்லென நிற்கும் மகேந்திரம்!”

“வியன்கொள் பூங்கொடி மேவிடப் பன்மரம் மயங்க ஓங்கிடும் அம்மலைச் சாரலின் வயங்கு நீழலில் வானவர் மாதரார்

இயங்கக் காண்பிர், இயக்கர்தம் சூழலே!”

79

கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வங்கத்திலிருந்து ஆரியரின் முதல் குடியேற்றம் விஜயன் தலைமையில் இலங்கையில் இறங்கியபோது, அவன் அத்தீவு இயக்கர்களின் கைவசம் இருப்பது கண்டான். அவன் முதல் முதல் மணந்து கொண்டது குவேணி” என்ற இயக்க இளவரசியையே.

இந்த மங்கோலிய இனத்தவரில் மிகப் பெரும்பாலானவர் கங்கைக் கடல் முகத்தினருகிலிருந்த பெரிய வாணிகக் களமான தாமலித்தியிலிருந்தே34 தென் இந்தியாவுக்குக் குடிகிளம்பி வந்தனர்.35 தமிழரைவிட மிகப் பழமைவாய்ந்த தெக்கண வாழ்நரிடையே 'தமிழர்' குழுவின் மொத்தப் பெயராக வழங்கப் பட்ட ‘தமிழர்' என்ற சொல்லின் விளக்கம் இதுவே. 'தமிழ்' என்ற பெயர் இங்ஙனமாகத் 'தாமலித்திஸ்' என்ற பெயரின் ஒரு மரூஉவாகவே காணப்படுகிறது. வாயு புராணத்திலும் விஷ்ணூ புராணத்திலும் கோசலர், ஒட்ரர் ஆகியவருடன் வங்கத்திலும் அதனையடுத்த கடற்பகுதியிலும் புதிதாகவந்து குடியேறிவர் களாகவே தாம்ரலிப்தர்கள் குறிக்கப் பெறுகிறார்கள்.36

தென் இந்தியாவின்மீது படையெடுத்து வென்ற மங்கோலிய மரபினரில் மிகப் பழமையானவர் மாறர் என்று தோற்றுகிறது. இம்மரபின் தலைவன் இதுமுதல் தென் இந்தியாவில் குடியேறிய மிகப் பழமையானவர்களின் தலைவன் என்ற முறையில் ‘பழையன்' அதாவது மிகப் பழமைவாய்ந்தவன் என்று அழைக்கப்பட்டான்.” இப்பழையன் மாறனின் தலைநகரம் மோகூர். இதன் திட்டமான இட அப்ைபை என்னால் வரை யறுத்துக்கூற முடியவில்லை. அது குமரிமுனைக்கு அருகாமையில்