உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. வெளிநாட்டு வாணிகம்

டு

மிகத் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலை நாடுகளின் வணிகர் கவனத்தைக் கவர்ந்துவந்தன. சாலமன் ஆட்சியின்போது (கிட்டத்தட்ட கி.மு. 1000-இல்) 'மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தார்ஷிஷின் கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்குகள், மயில்கள் ஆகிய வற்றை ஏற்றிக்கொண்டு சென்றன' என்று கேள்விப்படுகிறோம். வை தமிழகத்திலிருந்தே சென்றனவாகல் வேண்டும். ஏனெனில் இறுதிப்பொருள்கள் இரண்டையும் குறிக்க எபிரேய மொழியின் திருநூலில் (விவிலிய நூல்கள்) வழங்கிய பெயர்கள் ‘கபிம்’, 'துகிம்' என்பன. இவை அன்றுமுதல் இன்றுவரை தமிழில் வழங்கும் ‘கவி’ 'தோகை' ஆகிய தமிழ்ச்சொற்களே.

கிரேக்கர்களும்

பின்னாட்களில் அராபியர்களும் இத்தமிழக வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தினர். அரிசி, இஞ்சி அல்லது இஞ்சிவேர், கருவாப்பட்டை ஆகியவற்றுக்குக் கிரேக்க மொழியில் வழங்கிய பெயர்கள் (ஒருசா, ஜிஞ்சிபேர், கர்ப்பியன் ஆகியவை) கிட்டத்தட்ட அவற்றின் தமிழ்ப்பெயர்களே. கிரேக்க வணிகர்கள் இப்பொருள்களுடன் அவற்றின் தமிழ்ப்பெயர் களையும் தமிழகத்தி லிருந்து கொண்டுசென்று ஐரோப்பாவில் பரப்பினார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

டாலமி மன்னர்களின் ஆட்சியில் எகிப்திய கிரேக்கரும் இந்தியச் சரக்குகளில் பேரளவாக வாணிகம் செய்து வந்தனர். இதன் பயனாக அலக்ஸாண்டிரியா மிகப் பழமையான நாட்களிலிருந்தே ஆதாயமிக்க இவ்வாணிகத்துக்குரிய ஓர் உலக வாணிகக்கள மாய்விட்டது. கடல் நடுவே செல்லாத சிறு கப்பல்கள் சரக்குகளைச் செங்கடலிலுள்ள துறைமுகங்களுக்கு முதலில் கொண்டுசென்றன. அங்கிருந்து வணிகக் குழாங்கள் அல்லது சாத்துக்கள் அவற்றை ஒட்டகங்களின்மீது ஏற்றி நீல