உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

61

தீவுகளிலிருந்து வரும் ஆமையோடு முதலியவையும் இத்துறை முகத்தில் வந்து வாங்கப்படுகின்றன.

""

எகிப்திலிருந்து புறப்படுவதற்கேற்ற தலைசிறந்த பயணப் பருவம் எகிப்திய மாதம் எபிஃபி அல்லது ஜூலை. முதலில் அது சிறு கப்பல்களில் அரேபியாவிலுள்ள கனே, எண்டைமோன் துறைமுகங் களிலிருந்து கரைவழியாகவே நடைபெற்றது.ஆனால் கடலின் பொது அமைதிகளையும் துறைமுகங்களின் அமைப்பையும் மனத்திற் கொண்டு, ஆழ்கடலகத்தில் நேரடியாகச் செல்ல வழிவகுத்த முதல் கப்பலோட்டி ஹிப்பலாஸ் என்பவரேயாவர். எப்படியெனில், வடக்கே கிரேக்க உலகுக்குத் தனிச்சிறப்பான முறையிலுள்ள பருவக்காற்று அமைந்தடங்கியபின், அதன் தொடர்ச்சியாக இந்து மாகடலில் காற்று தென்மேற்கிலிருந்து தொடர்ச்சியாக வீசுகிறது. இக்கடல்களில் இந்தப் பருவக் காற்றைப் பயன்படுத்திப் புதுவழி கண்ட முதற் கடலோடியின் பெயரால் அது ஹிப்பொலாஸ் என்றே அழைக்கப்படுகிறது.

"புதுவழி கண்ட நாள்முதல் தற்சமயம்வரை இந்தியா நாடிச் செல்லும் கப்பல்கள் அராபியாவிலுள்ள கனேத் துறைமுகத்தி லிருந்தோ, ஆப்பிரிக்கக் கரையிலுள்ள ஆரோமெட்டாத் துறைமுகத்திலிருந்தோ புறப்படுகின்றன. முன்போலக் குடா, வளைகுடா, ஆகியவற்றின் போக்கிலெல்லாம் வளைந்து வளைந்து செல்லாமல், அவற்றையெல்லாம் மிகத் தொலைவிலேயே தாண்டிக் கப்பல்கள் இந்தியக் கரையிலுள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு நேராகவே செல்கின்றன. ஆனால் லிமுகரிகாவுக்குச் செல்பவர்கள் பாய்விரிக்கச் சிலநாள் காத்திருக் கின்றனர். பருகஸாவுக்கோ, ஸ்கிதியாவுக்கோ செல்பவர்கள் மூன்று நாட்களுக்குமேல் நேரம் தாழ்த்துவதில்லை.”

“ஏலா-பக்கரா அல்லது செம்மலை கடந்தபின் நாம் செல்லும் நாடு பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டது. இது பரலியா (புரளி) என்று பெயர் உடையது. அது கிட்டத்தட்டத் தென்வடலாகவே கிடக்கிறது. முத்துக்குளிக்கும் பகுதி அருகேயுள்ள கோல்காய் (கொற்கை) வரை அது பரவியுள்ளது. அது முழுவதும் பாண்டியன் ஆட்சிக்குட்பட்டதே."

“செம்மலையைக் கடந்தபின் முதல் துறைமுகம் பலிதா. அடுத்தது கொமார் (குமரி) இதில் ஒரு கோட்டையும் ஒரு