உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 29

யுடையவையாய், மேன்மேலும் வளர்ந்து கொண்டே செல்வதால், எப்படியும் உயிர்களை நல்வழிக்கே திருப்பும் இயல்புடையவை.

தீயன என்பன உண்மையில் நன்மை நோக்கிச் சுற்று வழியில் செல்பவையன்றி வேறல்ல. அத்துடன் தீயன தன்னலமுடையன வாதலால், தன்னைக் கடந்து தீமை பரப்புவதில்லை. நல்லனவோ பொதுநலச் சார்பானவையாதலால் தம்மைக் கடந்து நலம் பரப்புபவை. தீயவர் நாடும் நன்மை தமக்குரிய நன்மை. அது கைவராத நன்மை ஆகும். அவர்கள் நாடும் தீமையோ பிறருக்குரிய தீமை. இது தோல்வியே காண்பது. ஆனால் நல்லவர் நலமே நாடுவர். அதுவும் பிறர் நலமே. அவர்கள் தீங்குக்கு ஆளாவதாகத் தோற்றும்போதும் அது பொதுநலத்தின் மாறிய உருவாகிய மறை தீமையே.

இவ்வாறாக இயற்கையிலும் சரி, வாழ்விலும் சரி - தீமையின் ஆற்றல் சிறிது, எல்லையுட்பட்டது; நன்மையின் ஆற்றல் பெரிது, எல்லையற்றது. தெய்வப் பண்பின்வழி நிற்பவர் இவ்வாற்றலை வாழ்வில், இனத்தில் பெருக்குகின்றனர். இனத்தில் தெய்வப்பண்பு பரப்புகின்றனர்.

நலந்தரும் இயலுலகின் ஆற்றல்: துன்ப நுட்பம்

நலந்தரும் இயலுலகின் நல்லாற்றல் எங்கும் பரவியுள்ளது, எப்போதும் நிரம்பியுள்ளது. அணுக்கள் தம் அகத்தேயுள்ள சைவமைதியை எங்கும் இயல்பாகப் பரப்புவதுபோல, இந்நல்லாற்றலும் இயற்கையிலும் இயற்கை கடந்து உயிர்ப் பரப்பிலும் இயல்பாக நல்லமைதி பரப்பி வருகிறது. இந் நல்லமைதியே மெய்யறிவு, தன்னலம் போலவே சூழ்நலம் அல்லது பொதுநலமும் பேணும் ஒப்புரவமைதி. இவ்வழிப்படாத நிலை மடமை, தன்னல நிலை ஆகும். அது நிலவரமான நிலையன்று, ஏனெனில் சரிசம நிலையழிந்த அந்த இடத்தின் மீது சூழ்நிலையாற்றல் சுழல் காற்றாக, புயலாகச் சீறிவந்து, அதனை அழித்துச் சமநிலை பேண விரைகிறது. இந் நிலையையே நாம் துன்பம் என்கிறோம்.

தன்னலம் பெருகப்பெருக, இயல்பாகத் தற்காலிகமான இந்தத் துன்பநிலை மேன்மேலும் வளர்கிறது. அஃது இயற்கையை அழிப்பதில்லை. அதனைச் செப்பம் செய்து சமநிலைக்குக்