உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

77

கட்டாயச் செய்திகளைக் கடமைகளாக, இனிய கடமை களாக விருப்புடன் செய்வதே அவற்றால் நற்பயனும் இன்பமும் பெறும்வகை ஆகும். அவற்றைச் செய்ய விரும்பாமையோ, வேண்டாவெறுப்புடன் சுமைகளாக எண்ணிச் செய்வதோதான் அவற்றைத் தீங்காக்கி விடுகின்றன. கடுஞ்சுமையாக்கி, தாங்க மாட்டாப் பாரமாக்கிவிடுகின்றன. அத்துடன் தன்னலமற்ற உள்ளம் அவற்றின் கட்டாயத் தன்மையையே விருப்பார்வ மாக்கிவிடுகிறது. தன்னல உள்ளமோ அவற்றைத் துன்பத்துக் குரிய தீங்குகளாக்கிவிடுகிறது.

கடமைகள் நட்புப் பண்புகள், தெய்வீகப் பண்புகள்

மனிதன் ஓடி ஓடிப் பின்பற்றும் புற இன்பங்கள் உண்மையில் அவனைப் பசப்பி ஏய்க்கும் பகைப் பண்புகளேயாகும். அவன் கடமைகளோ, நண்பர்கள் - செய்யாது கைவிடும் சமயத்தில்கூட அவை கடிந்துகொண்டு இடித்துரைக்கும் நண்பர்களே! ஆனால் விருப்புடன் மேற்கொள்ளப்படும் கட்டாயச் செய்திகள் நண்பர்க்கும் மேற்பட்ட தெய்வீகப் பண்புகள். இச்செய்திகளே புற உலகில் நிரம்பியிருப்பது, வாழ்க்கை இவற்றின் கோவையாகவே அமைந்திருப்பது வை உலகின் தெய்வீகத் தன்மைக்கும், வாழ்வின் தெய்வீகத் தன்மைக்கும் சான்று பகர்வன ஆகும். இயற்கையின் இத்தெய்வீகப் பண்பு எங்கும் எல்லாச் சமயத்திலும் உயிர்களின் செயலைத் தூண்டி, அவ்வுயிர்கள் அறிந்தும் அறியா மலும் வாழ்க்கையின் தெய்வீகக் கூறுகளைத் தூண்டுகிறது.

-

இயற்கையின் தெய்வப் பண்பில் நின்று வாழ்க்கையின் தெய்வப் பண்புவழி தன் உள்ளத்தைப் பதப்படுத்திச் செல்பவன் மெய்யுணர்வும் மெய்யின்பமும் அடைகிறான். இரண்டுக்கும் எதிராக நின்று அவ்வப் பண்பு பேணுபவன்தான் பின்னும் தீம்பு வலையில் தானே சிக்கை மேன்மேலும் அழுந்துகிறான்.

தெய்வப் பண்பின் வழி நில்லாது தீமை சூழ்பவருக்குக் கூடத் தெய்வப் பண்புகள் உண்மையில் தீங்கு சூழ்வதில்லை. ஏனெனில் அவர்கள் தவறான வழியில் சென்று அடையும் தீங்குகள் அவர்களுக்குத் தண்டனையாகவும், திருத்தமாகவும் மட்டுமே அமைவன. மேலும் அவை தண்டனையாகத் தரும் தீங்குகள் உயிரற்றவையல்ல, எல்லையற்றவையுமல்ல. அவை உ உயிர்வளர்ச்சி