உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

||--

அப்பாத்துரையம் - 29

பளிங்குகளே. பொருள்களில் நீ கொள்ளும் விருப்புக்களும் வெறுப்புக்களும் பளிங்கில் தோற்றுபவை போல அவற்றில் தோற்றுபவைகளே. அவை உண்மையில் அப்பொருள்களுக் குரியனவல்ல; உன் உள்ளப் பண்புக்கே உரியன. உன் உளப்பண்பு களின் உரு நிழல்களே அவை. தன்னலமற்ற, சரியான மனப் பாங்குடன் அவற்றை அணுகினால் அவற்றின் உருவும் பண்பும் முற்றிலும் மாறுபடக்காண்பாய்.

மன உரத்துடனும் இன்ப நோக்குடனும் அவற்றை நோக்கினால், அவை அப்பண்புக்கியைய உருக்கொள்ளும். சீறுமுகத்துடன் அவற்றை நோக்கினால், அவை வெறுப்புக் குரியவையாகவே புலப்படும். உன் முகத்தின் மகிழ்வை, துன்பத்தைக் காட்டும் பளிங்கை நீ குறைகூற முடியுமா? அது காட்டும் முகநிலையைத்தான் நீ குறைகூற முடியும். அதுபோலவே புறப்பொருள்களின் விருப்பு, வெறுப்புக்கள், உன் விருப்பு வெறுப்புக்களே. அவற்றைப் பற்றிக் குறைபட்டுக் கொள்ளுதல்

தவறு.

கட்டாயம் செய்து தீர வேண்டிய செய்தி சரியான செய்தியாகவே இருக்க வேண்டும். ஏனெனில் சரியான செய்தியைச் செய்யாவிட்டால் ஏற்படும் தவறு, அதைச் செய்யாவிட்டாலே ஏற்பட்டுவிடுகிறது! கட்டாயச் செய்திக்கும் சரியான செய்திக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். முன்னதைச் செய்தே தீர வேண்டும். ஆனால் அதைச் சரியாகவும் செய்யலாம், தவறாகவும் செய்யலாம். பிந்தியதையோ செய்யலாம், அப்போது அது சரியான செயலாயிருக்கும். செய்யாமலிருக்கலாம், அப்போது அது தவறாயிருக்கும். ஆகவே கட்டாயச் செயலைச் சரியான செயலாக்குவதும் தவறான செயலாக்குவதும் முற்றிலும் நம் பண்பிலேயே அமைந்துள்ளது.

கட்டாயச் செய்திகளே இவ்வகையில் நேர் பளிங்கு போன்றவை. அவை நம் நன்மை தீமைப் பண்பை அப்படியே எடுத்துக்காட்ட உதவுகின்றன. ஆனால் சரியான செயல்கள், தவறான செயல்கள் இரண்டுமே வளைமுகக் கண்ணாடிகள் போன்றவை. சரியான செயல்கள் நம் நன்மையைச் சிறிது பெருக்கிக் காட்டுகின்றன. தவறான செய்திகள் இதுபோல நம் தீங்கைச் சற்றுப் பெருக்கிக் காட்டிவிடுகின்றன.