உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


என்பது க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுமருகல் நாட்டு மருகல் சபையார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும்... இந்நாட்டு வைப்பூர் ஊரால் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு தஞ்சாவூர் ஊரார் இடக்கடவ திருமெய்காப்பு ஒன்றும் என்ற கல்வெட்டினால் தெரிகின்றது. (South Indian Inscriptions Vol. II. Ins No.70)

இச்செய்தி மற்றொரு கல்வெட்டாலும் உறுதியெய்துகின்றது. அது, (1) 'திருவாய்க்கேள்வி முன்னாக திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 2- ஆவது ஆடிமாசம் செவரன்மேடான அகரநகரீசுவரச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் செம்பாதி காணியுடைய (2) சிவப்பிராமணன் காசிபன் இருஷப தேவ பட்டனேனும் இந்த ஸ்ரீ மூலஸ்தான முடையார் கோயிலிற் மற்றைச் செம்பாதி காணியுமுடைய இக்குடி மகாதேவப் பட்டனுள்ளிட்ட அனைவோமும் சோழமண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூர் தஞ்சாவூர் கிழவன் உலகளந்தா (3) ன் அகமுடையாள் உய்யகொண்டாள் பக்கற் காணி ஒகரியிலே நாங்கள் கொண்ட பழங்காசு இக்காசு மூன்றுக்கும் பலிசை நிசதிச் செலவாக இத்தேவர்க்கு அந்தியம் போது ஏற்றி இச்சந்தியிற் பேரமுது செய்த இத்தனையுஞ் செல்ல நாங்களும் எங்கள் சந்தானத்தாரும் சந்திராதித்தவரை... (4) திதல் ஒருசந்தி விளக்கு எரிக்கக் கடவோமாகச் சிலாலேகை பண்ணிக் கொடுத்தோம். இவ்வனைவோம் இவர்கள் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் சிவதாசன் ஆட்கொண்டானான நூற்று நாற்பத் தென்மனேன் இவை என் எழுத்து. இப்படிக்கு இவை இருஷபதேவ பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை மகாதேவ பட்டன் எழுத்து' என்பதாம். எனவே, நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர், இவ்விருகல்வெட்டுக்களிலும் குறிக்கப்பெற்றுள்ள தஞ்சாவூரே யாதல் வேண்டும் என்பது ஒருதலை.

இந்நாளில் நம்மாகாணத்திலுள்ள தாலுக்காக்கள் போல, சோழ மண்டலத்தில் பல உள்நாடுகள் முற்காலத்தில் இருந்துள்ளன. அவற்றுள் மருகல் நாடு என்பதும் ஒன்றாகும். இது