உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

111


பெரியபுராணத்தில் செருத் துணை நாயனார் புராணத்தில் உள்ள ஒரு பாடலும், இவ்வடிகள் பிறந்தருளிய திருப்பதி எந்நாட்டில் உள்ளது என்பதை நன்கு விளக்கு கின்றன.

அவை,

‘கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்கழற் சிங்கன்றன் றேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரித் தானென் றியம்புவரால் செழுநீர் மருகனன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே’
                திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 66.

‘உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி
கொள்ளுமியல்பிற் குடிமுதலோர்மலிந்த செல்வக் குலப்பதியாந் தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ்சேலுங்கயலும் செழுமணியுந்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர்‘

        பெரியபுராணம் - செருத்துணைநாயனார் புராணம். பா.1

என்பன. இவற்றால் செருத்துணையாரது திருப்பதி சோழ மண்டலத்தில் உள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர் என்பது வெளியாதல் காண்க.

இனி சோழமண்டலத்தில் தஞ்சாவூர் என்று வழங்கப் பெற்றுவரும் இரண்டு ஊர்களும், ஒன்று விசயாலயன், முதற் பராந்தகன், முதல் இராசராசன் முதலான சோழமன்னர்கள் வீற்றிருந்து செங்கோலோச்சிய திருவுடைமாநகரமாகும். இம்மாநகர், தஞ்சாவூர்க் கூற்றத்தில் உள்ளது என்பது பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ இராஜராஜே சுவரமுடையார்க்கு நாம் கொடுத்தன....[1] என்னும் தஞ்சைப் பெரியகோவிற் கல்வெட்டால் புலப்படுகின்றது. ஆகவே, தஞ்சாவூர்க் கூற்றத்திலுள்ள இத்தஞ்சாவூர் செருத்துணைநாயனாரது திருப்பதியன்று என்பது திண்ணம்.

சோழமண்டலத்தில் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மருகல் நாட்டில் ஒரு தஞ்சாவூர் உளது


  1. South Indian Inscriptions. Vol. II. Ins. No.1.