உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

66

'எவனாலவாயிடைவந் தமுதவாயுடைய

15

னெனவியம்பப்பெற்றோன்

எவன் பண்டைப் பனுவல் பல விறவாது நிலவவுரை யெழுதி

யீந்தோன்

எவன் பரமவுபகாரி எவன் நச்சினார்க்கினியனெனும் பேராளன் அவன் பாதவிருபோது மெப்போலு மலர்கவெனதகத்துமன்னோ” என்றும் ஆன்றோராற் சிறப்பிக்கப்பட்டவருமான ஆசிரியர் நச்சினார்க்கினியர் “கந்தழி என்பது என்பது ஒருபற்றுமன்று அருவாய்த் தானேயாய்த் தத்துவங்கடந்த பொருள்” என வுரை கூறி, இதனியல்பை ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் உய்த்துணர வைத்து

“உற்றவாக்கையிலுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பெற்றவாபெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசங்கண்டாமே'

பாராதே

என்று திருவாய்மலர்ந்தருளிய அருமைத் திருவாக்கினை எடுத்துக் காட்டி ‘என்று அதனை உண்மையான் உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க' என்று அதற்கு உதாரணமுங் காட்டி னார். எமக்கரிய நண்பர்களே! ஆ! பாருங்கள்! உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினிய ரென்னும் புலவர் பெருமானே ஸ்ரீமந் மாணிக்க வாசக சுவாமிகளை ‘அதனை உண்மையான் உணர்ந்தோர்' என விசேடித்து ரைத்தமையால் கந்தழியி னியல்பை அத் திருவாக்கே இனிது விளக்குவதென்பது பெற்றாம். தத்துவங்களாவன பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும், சோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணம் என்னும் பஞ்சஞானேந் திரியங்களும், சத்தப்பரிச ரூபரச கந்தம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளும், வாக்கு பாதம் பாணி பாயுருபஸ்தம் என்னும் பஞ்ச கன்மேந்திரியங்களும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான் கந்தக் கரணங்களும், காலம் நியதிகலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் சத்த வித்தியா தத்துவங்களும், சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் பஞ்ச சிவதத்துவங்களுமான முப்பத் தாறு தத்துவங்களுங் கடந்த பரம்பொருள் யாது அது கந்தழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/48&oldid=1583100" இலிருந்து மீள்விக்கப்பட்டது