உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

87

வினா (56) : நீங்கள் எங்ஙனம் அவ்வாறு கூறமுடியும்? அது துணிச்சலான முன்னறிவிப்பாகவோ நம் வருங்காலப் பேரவாவை வெளிப்படுத்துவதாகவோ அமையவில்லையா?

விடை : மாற்றங்கள் மனிதன் வேண்டும்போதே வரத்தக்கன. மனிதன் மாற்றம் வேண்டுவதோ அவனைச் சூழ்ந்துள்ள நிலைமைகளில் மனச்சலிப்புக் கொள்ளும்போது தான். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாறுதல் ஏற்படவேண்டும் என்பதில் ஆர்வமுடைய வராயிருக்கின்றனர் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஆழ்ந்து ஒருமுகமாகக் கிளம்பியுள்ள அவர்கள் பெருவாரியான அரசியலெழுச்சி அதற்குச் சான்று ஆகும். உற்பத்திச் சாதனங்களில் பெரும் பான்மையை அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவம் இங்கே வெறும் முதலாளித் துவமாயில்லை; பிரிட்டிஷ் முதலாளித்துவமாயுள்ளது. இருக்கும் இந்திய முதலாளித்துவம் அதன் மூத்தண்ணனாகிய பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் தயவிலேயே வாழுகின்றது. எனவே இந்திய முதலாளிகள் பிரிட்டிஷ் முதலாளித்துவப் பிடியுணர்ந்து மனக்குறைவுபெற்றுத் தொடக்கத்தில் அதனை வீழ்த்த மக்களுடன் சேர்ந்து ஒன்றுபட்டுழைத்தனர். இதனையே நாம் சுதந்திரம், அதாவது ஏகாதிபத்தியக் கட்டிலிருந்து விடுபடும் விடுதலை என்று கூறினோம்.

மேலும் இந்தியா மிகப் பெரியதொரு நிலப்பரப்பு. இங்குள்ள மக்கள் பெரும்பாலோரும் ஏழைகள். ஆகவேதான் மக்கள் தொகையிலும் இந்திய இயக்கம் பேரளவு ஆதரவுடைய தாயிருந்தது. இந்திய மக்கள் மாறுபாட்டை விரும்புகின்றனர் என்பதிலும் ஐயமில்லை. இல்லாவிட்டால் தியாகங்கள், தொல்லைகள், இடைஞ்சல்கள் முதலிய இன்னல்கள் கொண்ட ஒரு இயக்கத்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இதுவரை நன்கு உணர்ந்து கொள்ளாதது யாதெனில் தங்களுக்கு வேண்டும் மாற்றம் எது என்பதே. இதையே நாம் அவர்களுக்குக் கூறவேண்டும் அதாவது அவர்களிடையே இது பிரசாரம் செய்யப்பட வேண்டும். மக்கள் கைக்கு அதிகாரத்தைக் கொண்டு வருதல்; உற்பத்திச் சாதனங்களைச் சமூக உடைமையாக்குதல்; விஞ்ஞானத்தின் உதவியைக்கொண்டு தேசிய வளப்பங்களை உச்ச அளவு உற்பத்திக்குப் பயன்படுத்துதல் ஆகிய அடிப்படைத்