உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பகுதி - 2 இந்தியாவுக்கான சமதர்மம்

வினா (55) : இந்தியாவிலுள்ள நிலைமைகள் ஐரோப்பா விலுள்ள நிலைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டாகவேண்டும். ஐரோப்பாவில் முதலாளித்துவம் முன்கூட்டி வந்தது. உழைப்பு வகுப்பும், அதுபோலவே சமதர்ம இயக்கமும் முன்கூட்டி வந்தன. இதைப் பார்க்க, இந்தியா சமதர்மத்திற்குப் பக்குவமடைந்துள்ள தென்று உங்களால் கூறமுடியுமா?

விடை : ஐரோப்பாவில் முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பு இயக்கமும் முன்கூட்டியே வந்தன என்பது உண்மையே. ஆனால் ஐரோப்பாவிலேயே அவை சில நாடுகளில் மற்றநாடுகளைவிட முன்கூட்டி எழுந்தன. எடுத்துக்காட்டாக முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பும் ஜெர்மனிக்கு முன்பே இங்கிலாந்தில் தோன்றின. ஆயினும் பிரிட்டனில் அத்தகைய இயக்கம் ஏற்படுமுன்பே உழைப்பு வகுப்பியக்கம் ஜெர்மனியில் தோன்றிவிட்டது. எனவே ஒரு வகுப்பு முற்பட்டுத் தோன்றுவதும் பிற்பட்டுத் தோன்றுவதும் அதன் வளர்ச்சியின்போக்கில் உருப்படியான மாறுபாடு எதுவும் உண்டுபண்ணி விடாது என்று காணலாம்.

இந்தியாவில் முதலாளித்துவமும் உழைப்பு வகுப்பு இயக்கமும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அவற்றின் தோழமை யியக்கங்களைப் பார்க்க மிகவும் இளமைநிலையிலுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் இது காரணமாகச் சமதர்மம் தொலைதூர வருங்கால வளர்ச்சியாகித் தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை.. உண்மை நிலையைப் பார்க்கப் போனால் புறச் சூழ்நிலைகள் (நாட்டு நிலைமைகள்) இந்தியாவை ஐரோப்பாவை விட அதற்குப் பக்குவமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.