உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

85

பான்மையுடையது. அதன் முக்கிய நோக்கம் நாடுகளின் மக்களிடையேயும் நாடுகளிடையேயும் நட்பையும் ஒத்துழைப்பையும் உண்டுபண்ணுவதும், வேற்றுமைகளை ஒருவர்க்கொருவர் கலந்து பேசுவதால் தீர்த்துக்கொள்ளுவதுமேயாகும். இது சிலர் கருதுவது போல வெறும் கனவியல் கற்பனையன்று. ஏனெனில் முதலாளித்துவ உலகில்கூட, சர்வதேசத் தொடர்பின் பெரும் பகுதியும் ஒருவர்க்கொருவர் ஆலோசிப்பதன் மூலமே காவல் படைத் தேவையின்றித் தீர்க்கப்படுகிறது. மேலும் போருக்கான தூண்டுதல் பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளின் போட்டிகளால் ஏற்படுகிறது. சமதர்ம அரசியல்களிடையே அத்தகைய போட்டிக்கு இடமில்லை. ஏனெனில் விற்பனைக்களம் அவாவி அலையும் முதலாளியோ ஏகாதிபத்திய வெறிகொண்ட முதலாளி அரசியலோ இருக்கமாட்டாது.

மக்கள்

போர் என்பது ஒரு மனப்பான்மையே. படைவீரர்களைக் காணும்போது அவர்கள் போர் முறையில் சிந்திக்கின்றனர். ஆனால் போர்கள் என்பது படுகொலைபோன்ற தீயசெயல்கள் என்றும், அவற்றில் ஈடுபடக்கூடா தென்றும் குழந்தைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட்டால், ஒரு தலைமுறையிலில்லா விட்டாலும் அடுத்த தலைமுறையில் மக்கள் போர் என்றவுடன் வெறுப்படையத் தொடங்கி விடுவார்கள்.

இங்ஙனம் கூறும்போது சமதர்ம அரசியல் எல்லா வழியிலும்‘அமைதியியக்க' (Pacifist) அரசியலாயிருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அமைதி யியக்கம் போரை எதிர்ப்பது அருளிரக்கம் காரண மாகவே. ஏனெனில் அமைதியியக்கத்தார் முதலாளித்துவத்தை எதிர்ப்ப தில்லை. மேலும் சமதர்ம அரசியல் எதுவும் முதலாளித்துவ உலக அமைப்பிற்குள் இருக்கும்வரை அது தன்னைப் பாதுகாக்கப் பெரிய படையை வைத்துக் காப்பதுடன் தற்காப்புக்காகப் போர்களில் கூட ஈடுபடவே செய்யும். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து முதலாளித்துவம் வெளியேற்றப்படுந்தோறும் போர்ப்படைகள் வைத்திருக்க வேண்டும் அவசியமும் குறைந்து கொண்டே வரும். உலகின் ஒரு பாதி சமதர்ம அரசியலாய் விட்டால்கூட, உலகிலிருந்து போர் மறைந்தே விடும் என்று எண்ணுகிறேன்.