உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

109

முதலாளித்துவ வகுப்பே. இது மக்கள் தொகையில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடுகூடத் தேறாது. ஆகவே இந்தியாவில் உழைப்பு வகுப்புச் சிறிதென்பதை அது அரசியலை நடாத்தும் தகுதியுடைய தென்பதற்குக் காரணமாகக் கூறமுடியாது. ஆனால் தப்பெண்ணம் ஏற்படுத்துவதற்கான முக்கியமான காரணம் வேறொன்றுள்ளது. உழைப்பு வகுப்பு என்பது முற்றிலும் தொழிற்சாலை உழைப்பாளிகளையோ உடலுழைப்பாளி களையோ மட்டிலும் குறிப்பதன்று. உழைப்பினால் ஊதியம் பெறும் எல்லா வகுப்பினரும் அதில் அடங்கியவர்களே. பேராசிரியர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் பொறியாளர்களுமான எத்தனையோ பேர் திறமையுடையவர் களாகவும் (நல்ல உடைகூட உடையவர்களாகவும்) உள்ளனர். ஆட்சிப் பொறுப்பை வகிக்க அவர்கள் திறமையுடையவர்களே என்பதை நீங்களேகூட மறுக்க மாட்டீர்கள். இவர்களை உள்ளிட்டதாக உழைப்பு வகுப்பு உணரப் பட்டால், அரசியல் துறையில் சமதர்மக் கோட்பாடுகளைப் புகுத்துவது பொருந்தாக்கூற்று என்ற எண்ணம் ஏற்பட இடமில்லை.

இந்திய உழைப்பாளி வகுப்பு மிகப் பிற்போக்கடைந் துள்ளது என்பது மறக்க முடியாதது. இப் பிற்போக்குத்தன்மை உழைப்பு வகுப்பியக்கமில்லாமல் அகற்றப்படக் கூடியதன்று என்பது எண்பிக்கப் பட்டுள்ளது. சமதர்மம் இப்பிற்போக்கை அகற்றுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அதுவும் ஒரு சீர்திருத்த முறையாக அல்ல, அடிப்படைக் கோட்பாட்டு முறையில், கொள்கை முறையில், பிற வகுப்புக்களைவிடத் தம் வகுப்பு பிற்போக்காகவுள்ளது என்பதை உழைப்பு வகுப்பே அறிந்துள்ளதனால் அத்தன்மையை அகற்றுவதில் அது மற்ற எவரையும் விட மிகுதியான அக்கறை காட்டுவது உறுதி.

வினா (68) : உங்களைக் கண்கூடான செய்தி பற்றிய ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் புகைவண்டித் துறைப்பற்றிய பிரச்சினையைச் சமதர்மம் எப்படித் தீர்க்கும்? இன்றைய நிலைமைகளை விட நல்ல நிலைமைகளைக் கொண்டு வர அது என்னென்ன செய்யும்?

விடை : இது ஒரு நல்ல கேள்வியே; ஏனெனில் இது பொதுச் செய்திகளைப்பற்றிக் குழப்பாமல் குறிப்பிட்ட வரையறையுடன் மறுமொழி கோருகிறது. மறுமொழியும் ஒரு