உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

||--

அப்பாத்துரையம் - 46

பிற்போக்குத்தன்மை இல்லாமல் செய்வதும், செல்வம் காரணமாகவோ, பிறப்புக் காரணமாகவோ உயர்வு தாழ்வுக்கு இடமில்லாமல் செய்வதும் ஆகும்.

இக்கொள்கையை வலியுறுத்துவது உழைப்பு வகுப்பின் இயக்கம் மட்டுமே. அது ஒன்றே இது பற்றிப் பேசியும் பிரசாரம் செய்தும் வந்துள்ளது. அதனால் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் அதனைச் சார்ந்தவர்களே அக்கறை யுடையவர்களாவர். இந்த முன்னணி வேலையைச் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் அவ்வுழைப்பு வகுப்பிலிருந்தே வருகின்றனர். ஆனால் இதே முறையில் இத்துறையில் உழைப்பவர்கள் அனைவருமே தொழிற்சாலையிலிருந்து வெளிவந்து இன்றும் அதன் கந்தலாடைகளை உடுத்திக் கொண்டிருக்கும் உழைப்பாளிகள் என்று கூறிவிடுவதற்கில்லை. இவர்கள் ஒரு காலத்தில் உழைப்பாளிகளாய் இருந்தவர்கள் ஆகலாம்; சில சமயம் அவர்கள் உழைப்பாளி வகுப்பினுக்கே உரியவர்க ளல்லாமல் அறிவு வகுப்புக்கோ, தொழில்துறை

ழியர் வகுப்புக்கோ உரியவராயிருக்கக்கூடும். நாம் கருத வேண்டியது அவர்கள் யார், எந்த வகுப்பிலிருந்து வந்தவர்கள் என்பதல்ல; அவர்கள் சமதர்ம நோக்கத்தை முந்துறச் செய்பவர்களா என்பதே; லெனின் தெளிவுபட விளக்கியபடி “தனிமனிதர் வகுப்புக்கு வகுப்பு மாறலாம்; ஆயினும் வகுப்புக்கள் தனித்தனி வேறாகவே இயங்குகின்றன.”

க்கொள்கை விளக்கம் வெறும் ஏட்டுக் கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இந்தியாவில் சமதர்மம் நனவாகும்வரை இக்கேள்விக்கான மறுமொழி ஏட்டு விளக்கமாகவேயிருக்க முடியும். எனினும் உழைப்பு வகுப்பு மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியேயன்றோ என்ற அணுகிய வினாவுக்கு விடைதந்தாக வேண்டும்; ஏனெனில் சமதர்மம் இந்திய நிலைமைகளுக்கு ஒவ்வாதது, அதனிடையே வெற்றியடைய முடியாதது என்று நாட்டுவதற்கு அது எப்போதும் மீண்டும் மீண்டும் கூறப்படும் ஒரு தடையுமேயாகும். கொள்கையடிப்படையில் ஒரு வகுப்பின் தொகையே அவ் வகுப்பினத்தை அது ஆளுவதற்கான உரிமை தருவது. செயலில் இது பெரும்பாலும் நடைபெறுவ தில்லை. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடுகளில் ஆளும் வகுப்பு