உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

107

வகுப்புச் சார்புடையதே.பகுத்தறிவு முறையில் அதை உணர்ந்து வழிகாட்டுவதற்கும் அதன் வகுப்பமைதியை அறிவது அவசியமாகும்.

வினா (67) : சமதர்மம் உழைப்பாளிகள் அரசு பற்றிப் பிரசாரம் செய்துவருகிறது. அனால் பிற மக்களின் தொகையைப் பார்க்க உழைப்பாளி வகுப்பு மிகவும் சிறியதும் பிற்போக்கானதும் கல்வியறி வற்றதுமாயுள்ளது என்பதனை நீங்கள் கவனிக்க வேண்டும். இந் நிலைமையில் அவர்களால் அரசியல் காரியங்களை எங்ஙனம் பொறுப் பேற்று நடத்த முடியும்? வெறும் கொள்கைகளை அளக்காமல் காரியச் சார்பில் நின்று விடை தாருங்கள்.

விடை : பொதுவில் ‘உழைப்பாளி'யைப்பற்றி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையான கருத்து கொண்டுள்ளனர். சிலர் உழைப்பாளி என்னும்போது விட்டு வேலைக்காரனை எண்ணுவர்; சிலர் உடலுழைப்பாளியை, சிலர் தோட்ட வேலைக்காரனை, இங்ஙனமாகப் பலர் பலவாறாக எண்ணுவர். உழைப்பாளிகள் அரசு என்று கேட்கும் போதெல்லாம் ஒவ்வொருவர் மனத்திலும் இதற்கேற்ப வீட்டு வேலைக்கார னாட்சி, உடலுழைப்பாளனாட்சி, தோட்ட வேலைக்காரனாட்சி கிய கற்பனைக ளெழுந்து உடலுழைப்பாளியோ அல்லது தோட்டக்காரனோ முதன் மந்திரியாக அல்லது வேறு உயர் பணியாளனாக இருக்கும் ஆட்சி பற்றிய தோற்றங்களே முன் வந்து தோற்றுகின்றன. இக்கற்பனை இயல்பாகவே அவர்களுக்குப் பொருத்தமற்றதாகவும் அருவருப்பாகவும் கேலிக்கூத்தாகவும் படுகிறது.ஆனால் இந்நிலைக்குக் காரணம் நம் கற்பனையேயன்றிச் சமதர்மமன்று. செயல்முறையில் சமதர்மத்தைப் பற்றி எண்ணும்போது நாம் கவனிக்க வேண்டுவது தனிப்பட்ட தொழிலாளியைப் பற்றியோ அல்லது தொழிலாளி வகுப்பையோ கூட அன்று. தொழிலாளி வகுப்பியக்கத்தை மட்டுமே. இவ்வியக்கத்தின் நோக்கம் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப் பாளியையும் ஒரு அரசனாகவோ மண்டலத் தலைவனாகவோ ஆக்குவதன்று; அது சிறு பிள்ளைத்தனமான செயலாகிவிடும். சமதர்மத்தின் முக்கிய நடைமுறை வேலை சமூகத்தைச் சீர்திருத்தி யமைத்து அதன்மூலம் சுரண்டல், வறுமை, கல்வி யில்லாமை,