சமதர்ம விளக்கம்
133
மாணவனும் மட்டுமன்றி அதனை வேறு யாரும் பயன்படுத்து வதற்கில்லை. இது இயற்கை யறிவுக்குப் பங்கம் விளைப்பது. இறுதியில் சமூகத்திற்கு அழிவு தருவதும் ஆகும்.
முடிவில் சுருக்கிக் கூறுவதானால், சமதர்மத்தின் மூலம் பிள்ளைகளுக்கு உடல் வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டிய வசதிகள் யாவும் அரசியலாலேயே இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். ஏனெனில் இவ்வளர்ச்சிக்கு உதவுவதன்மூலம் இறுதியாக நலமடைவது சமூகமே. கல்வி ஒரு சமூகத்தின் உயர்நிலையான காரியமாதலால் அது நன்னிலை யுடையவர்கள் மட்டுமே பெறட்டும் என்று விட்டுவைக்கக் கூடியதன்று. அங்ஙனம் விட்டு வைத்தால் இந்தியா பிற்போக்கான, வலிவற்ற, ஏழ்மை மிகுந்த நாடாகவே இருக்கும். இலவசப் பொதுக் கல்விக்குப் பெருஞ்செலவு பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் யார் வலிவின்மீதும் ஆற்றலின் மீதும் தேசத்தின் ஆற்றல் சார்ந்துள்ளதோ, அவர்களுக்காகச் செலவிடாத அச்செலவு வேறு யாருக்குத்தான் செலவிடப்பட முடியும்? அது உண்மையில் ஒரு செலவு அன்று; விலையேறிய ஒரு மூலதனச் சேமிப்பேயாகும். அதைச் செய்து முடிக்க எத்தனை தியாகங்கள் செய்தாலும் தகும்.
வினா (78) : கல்வி பற்றி நீங்கள் விளக்கிக் கூறிய உயர் கருத்துக்கள் யாவும் தாமே இயல்பாக ஆராய்ந்தறியும் ஆற்றலும் மனித இனத்துக்குத் தொண்டாற்றும் தன்மையும் உடைய அறிவு நலமும் உடல் நலமும் வாய்ந்த ஆண் பெண்பாலாரைக் கட்டாயம் உண்டுபண்ணக் கூடியவையே. ஆயினும் சமதர்மம் எல்லாரையும் ஒரே வகை அறிவுச் சட்டத்தில் போட்டு நெருக்குமென்றும், தமக்கென யாரையும் சிந்திக்க விடுவதில்லை யென்றும் கேள்விப்படுகிறோம். அத்துடன் ஒவ்வொரு வனும் அரசியலார் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டுமாமே! வேறு வகையாகக் கூறினால் தனிப்பட்டவர் சுதந்திரம் என்பதே கிடையாதாம். சமதர்மம் இவ்வாறு செய்யுமானால், நல்ல கல்வி முறையிருந்துதான் என்ன பயன்? முதலாளித்துவ அரசியலின் கீழோ நாம் விரும்பிய எதையும் படிக்கலாம்; விரும்பும் எதையும் பற்றி எண்ண மிடலாம்.
விடை: இது முற்றிலும் பிரசாரப் புரளி. இதில் இம்மியளவு கூட உண்மை கிடையாது. சமதர்மம் தனிப்பட்டவர் அறிவுக்கு முழுநிறை விடுதலை கொடுக்கவில்லையானால், அது தன்