வருங்காலத் தலைவர்கட்கு
167
எரிகிறது. நமக்குச் சோறாக்குவதற்காக அது எரிவதில்லை. எரிவதற்காகவே எரிகிறது. ஆனால் அது நமக்குச் சோறாக்கவும் ஒளி தரவும் தவறுவதில்லை. அது போலவே விளையாட்டும் விளையாட்டுக்காகவே விளையாடத்தக்கது. ஆனால் அவ் விளையாட்டின் பண்பே விளையாடுவோர் நாட்டின் பண்பாய் வளரும்.
நீ விளையாட்டில் கருத்துச் செலுத்து. அதன் வெற்றியிலும் கருத்துச் செலுத்து. ஆனால் உன் வெற்றி உன் நாட்டு வெற்றியில் ஒரு பகுதியென்பதையும், உன் நாட்டு வெற்றியிலும் உலக வெற்றியிலும் உனக்கு ஒரு பகுதி உண்டு என்பதையும் நீ மறந்து விடாதே. நாட்டில் உன் பங்கை ஆற்றத் தவறாதே. ஆனால் பிறர் பங்காற்ற இடம் விடவும் தவறாதே. ஏனெனில் நீ எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், நீ நாடாக மாட்டாய். நாடு வாழாமல் நீ மட்டும் வாழ, நீ நாடுகள் ஏற்படாத காலத்திய பழங்கால மனிதனுமல்ல. தன்னடக்கம், தன் கடனுணர்ச்சி ஆகியவற்றுடன் தன் மதிப்பும், தன் முயற்சியும் உடையவனாய் இருப்பவன் தன்னையும் உயர்த்தித் தன் நாட்டையும் உயர்த்துகிறான்.
மி
விளையாட்டின் விளைவாக நீ
பல்லாற்றானும் நலம் விளைவிப்பாயாக!
நாட்டிற்குப்