(166
அப்பாத்துரையம் - 46
வலிவு குறைந்தவர்க்கு ஊறு வராதபடி பிரித்து, அத்துடன் று அவர்கள் மீண்டும் சண்டை பிடிக்காதும், பகைமை பாராட்டாதும் இருக்கும்படி நட்பாடச் செய்வர். வயதிலோ திறத்திலோ ஒவ்வாதவர் என்று தெளிவாகக் கண்டால், சண்டை செய்ய விடுவதில்லை. பெரியவன் சிறியவனை, அல்லது வலியவன் மெலியவனைத் தாக்குவது கண்டால் அவ்வலியானுடன் ஒப்பான ஒருவன் மெலியவனுக்கு ஆதரவாளனாக (Champion) நின்று எதிர்ப்பை மேற்கொள்வான். இதுபோலவே ஆணை ஆண், பெண்ணைப் பெண் தாக்குவதன்றிப் பெண்ணை ஆண் தாக்குவது என்பதுஆங்கிலப் பள்ளிகளிலும் நடவாது, மற்றும் இது ஆங்கில நாட்டிலோ ஆங்கிலேயர் மதிக்கும் வேறு எந் நாட்டிலோ நடைபெற முடியாத செய்தியாகும். குடி வெறியில் ஒருவன் இச் செயலுக்காளானால்கூட, அவன் பின்னால் அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வொரு செயலுக்காக அவன் என்றென்றும் மிகவும் வெட்கித் தலை குனியவும் வேண்டி வரும்.
விளையாட்டின் இன்னோரரிய பண்பு, தொகுதி மனப்பான்மை. ஒருவன் தன்வெற்றியை மட்டும் நாடினால் இம் மனப்பான்மை ஏற்பட முடியாது.படகுப் போட்டியில் ஒருவன் தன் வலுவை மிகுதி காட்டினாலும் படகின் ஓட்டம் தடைப்படும். வலுக் குறைந்தாலும் படகின் வேகம் தடைப்படும். தன் தளர்ச்சியைப் பெருக்கும் போதே தொகுதியின் உறுப்பினர் ஒவ்வொருவருடனும் எல்லாருடனும் ஒத்து வளர்ச்சியடைய வேண்டும். தனி மனிதன் தொகுதிக்காக, தொகுதி தனி மனிதனுக்காக (Part for whole, whole for part) என்ற இப்பண்பே விரிந்த ஒரு நாட்டின் தசியப் பண்பு ஆகிறது. தனி மனிதன் தேசத்துக்காக, தேசம் தனி மனிதனுக்காக' என்ற ஆங்கில மக்கள் தேசியப் பண்பைப் பிற நாடுகள் எளிதாகப் பின்பற்ற முடியாததன் காரணம் இதுவே. இப் பண்பு ஏற்படாதவரையில் இந் நாட்டுச் சட்டம், அரசியல் மன்ற முறை. மரபுகள் யாவும் பார்த்துப் பகர்ந்திடப்பட்டாலும் பொருளில்லாமல் போய்விடுகிறது.
கலை கலைக்காகவே; வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறப்படுவது போல விளையாட்டு விளையாடுவதற்கே என்று கூறலாம். ஆனல் கலை கலைக்காக என்று கூறுபவரும் அது வாழ்க்கையில் பயனற்றது என்று கூற முடியாது. நெருப்பு