உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

165

பொறுப்புணர்ச்சியின் ஒழுங்கு முறைகளை (Laws of Honour) அறியாதவர் என்பது. ஆங்கில நாட்டின் நன்மகனாக நடமாடும் உரிமை பெற்ற எவரும், பொது மக்களும்கூட, இக்குறை யுடையவராக இருக்க முடியாது.ஏனெனில் ஆங்கில நாட்டின் விளையாட்டிலேயே இது தோன்றி, விளையாட்டாளர்களிடம் மட்டுமன்றி ஏனையோரிடமும் பரவிவிட்டது. கீழ்நாட்டில் ஆங்கில விளையாட்டாளர்களுடன் போட்டியிடத் தக்க தோன்றியுள்ளாராயினும், இவ் விளையாட்டுப் பண்பு எல்லா மக்களிடையேயும் பரவுமளவு நேர்மையான விளையாட்டுணர்ச்சி அங்கே வளர்ச்சி யடையவில்லை என்பதை இது காட்டுகிறது.

விளையாட்டாளர்கள்

ஒரு நாட்டின் நாகரிகப் பண்பை வளர்ப்பதில் விளையாட்டாளர் பண்பு எவ்வளவு தொலை பொறுப்புடையது என்பதை மேலீடாக எவரும் காண முடியாது. இங்கிலாந்திலும் மேனாடுகளிலும் விளையாட்டில் வெற்றிக்கு மட்டுமன்றி விளையாட்டு நேர்மைக்கும்' பெரிதும் மதிப்புத் தரப்படுகிறது. ஒத்த வயதுடையவர்கள், ஒத்த எடையுடையவர்கள், ஓரளவு ஒத்த நிலையும் வாய்ப்பும் உடையவர்கள், ஒத்த கருவிகளைக் காண்டே, ஒத்த ஒரே ஒழுங்கினடிப்படையில் மட்டுமே போட்டியிட இடமளிக்கப்படுவர். வாட்போரிடு முன் வாளொடு வாள் அளக்கும் (Measuring swords) பண்டைக் காலப் பண்பு தனடிப்படையாகவே ஏற்பட்டது. இதே அடிப்படையில்தான் ன்றும் போட்டி ஆட்டங்களில் மூன்று ஆட்டம் ஏற்பட்டுள்ளன. ஆட்ட அழைப்பாளர் இடத்தில் ஒன்றும், ஆட்டக்காரர் இடத்தில் ஒன்றுமாக ஆட்டம் மாற்றப்படுகிறது. வழக்கமல்லாத இடவசதிக் குறைவால் தகாப் போட்டி நிலவப்படாது என்பதில் அத்தனை அக்கரை! ஒரே இடத்திலும் காற்றோட்டம், நில ஏற்றத்தாழ்வு ஆகியவை போட்டியைப் பாதிக்காதிருக்க ஆட்டக் குழுவிடையேயும் இட மாற்றம் செய்யப்படுகிறது.

விளையாட்டில் தோற்றிய இந் நேர்மையைப் பிள்ளைகளின் பள்ளி வாழ்வில் நன்கு காணலாம். இரண்டு பேர் சண்டை யிட்டால் அவர்களில் ஒருவர் கை கீழாவது வரை யாவரும் தலையிடாது பார்த்துக் கொண்டிருப்பர். அதன் பின்