உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(164

அப்பாத்துரையம் - 46

வெற்றியையும், தன் நாட்ட வெற்றிக்கு ஒப்பாக மற்ற நாட்டு வெற்றிகளையும் உலக வெற்றியையும் கருதி மகிழ்தல் வேண்டும். இவ்வெல்லா இடங்களிலும் போட்டி என்பது ஒருவரை ஒருவர் ஊக்கும் போட்டியாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் வென்று மகிழும் போட்டியாக யிருத்தலாகாது.

இவ்வெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே ஆங்கில மொழியில் விளையாட்டுப் பண்பாடு என்பதற்கான சொல் (Sportsmanship) மற்றெம் மொழியின் சொல்லையும் விட உயர்வுடையதாய் நயத்தக்க நாகரிக நிலையின் உச்ச எல்லையைக் காட்டுவதா யமைந்துள்ளது. எதிர் தரப்பாளர் வெற்றி யடைந்தனர் என்பது தெரிந்தவுடனே ஆங்கில விளையாட்டாளர் தம் தோல்வியை உடனே மறந்து மற்ற யாவருக்கும் முற்பட்டு வெற்றியாளரைச் சென்று பாராட்டும் மரபு எந்நாட்டவராலும் உச்சிமேற் கொள்ளத் தக்க உயர்வடையது ஆகும். அது உலக நாகரிகத்தையே ஒரு படி உயர்த்தியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இவ் விளையாட்டுப் பண்பு இல்லாத ஒரு காரணத்தால்தான் கீழ்நாடுகள் இன்னும் முற்றிலும் மேனாடுகளை எட்டிப் பிடிக்காதிருக்கிறது என்று கூறத்தகும். கீழ்க்குறிப்பிடும் நிகழ்ச்சி இதனை வலியுறுத்தும்.

ஓர் ஆங்கில நகரப் பல்கலைக் கழத்திற்குக் கீழ் நாடுகளிலிருந்து ஒருவர் பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தார். அவர் நாகரிகமிக்க உயர் குடியினர். உயரிய தோற்றமும் நடையும் நாகரிகமும் உடையவர். கல்வியிலும் சரி, பிறருடன் அளவளாவுவதிலும் சரி, அவர் இணையற்றவராகவே இருந்தார். மேனாட்டினரும், கீழ் நாட்டினரும் எத்தகைய குறையும் காண முடியாத அளவு கிட்டத்தட்ட முழுநிறை மனிதராகவே அவரைக் கருத இடமிருந்தது. அவர் விளையாட்டு மேடையிற் கலப்பதில்லை. ஆனால் இவ்வளவு நிறைவுடையவரிடத்தில் இது ஒரு குறையாக மாட்டாது என்றே எவரும் கருதுவது இயல்பு அங்ஙனமே கருதினர். ஆங்கிலேய ரிடையேயும் ஒவ்வொரு சிறப்புக் குறைந்தவர் இருக்கக் கூடுமன்றோ? ஆனால் அவருடன் நெருங்கித் தோழமை கொண்ட சிலர் ஆங்கிலேயர் எவருக்கும் அதிர்ச்சி தரத்தக்க, எவருக்கும் வெறுப்பும் அருவருப்பும் உண்டு பண்ணத்தக்க ஒரு குறையை அவரிடம் கண்டனர். அதுவே அவர்