வருங்காலத் தலைவர்கட்கு
163
ஆனால் இவற்றைச் சுட்டிக்காட்ட இன்னொரு காரணமும் உண்டு. சூதாட்ட மனப்பான்மையையும் பொருள் வருவாய் மனப்பான்மையையும் அகற்றிய பின்பு கூட, சூதாடிகளின் மற்றோர் அடிப்படைப் பண்பு விளையாட்டாளர்களைப் பற்றுவதுண்டு.அது விளையாட்டின் ஒரு முக்கிய குறிக்கோளாகப் பலரால் கொள்ளப்படுவதனால் அதன் இடர் இன்னும் மிகுதி. அதுவே வெற்றியை நோக்கமாகக் கொண்டு விளையாட்டி லிறங்குவது ஆகும்.
விளையாட்டில் வெற்றியடைந்தவருக்குப் பரிசு கொடுக் கிறோம். முதல் வெற்றிக்குப் பொற் பதக்கமும் அடுத்ததற்கு வெள்ளிப் பதக்கமும் என இவ்வாறு வெற்றிப் படிகளும் வகுத்திருக்கிறோம். நல்ல விளையாட்டாளனை இக்கால வீரனாக அல்லது தெய்வமாகக் கொண்டாடுகிறோம். நாட்டின் வல்லான், உலகின் மிக்கான் (Champion) எனச் சிறப்புப் பெற ஒவ்வொரு விளையாட்டாளனும் நாடுகிறான். அப்படியிருக்க வெற்றி நாடுவது ஒரு குறையாகுமா என்று எண்ணலாம்.
வெற்றி நாடுவது கெடுதல் என்பதல்ல. சூதாட்டத்தின் அடிப்படைப் பண்பினையே நான் கண்டித்தது. ஆனால் நாடும் வெற்றி உன் வெற்றியன்று, தனி மனிதன் தன்னல வெற்றியன்று; உன் குழுவின் வெற்றியும், உன் நாட்டின் வெற்றியும் மனித உலகின் வெற்றியுமேயாகும். உன் வெற்றி யார்வம் உன் குழுவிற்கு வெற்றி தரும்; உன் குழுவின் வெற்றி யார்வம் உன் நாட்டுக்கு வெற்றி தரும்; உன் நாட்டின் வெற்றி யார்வம் உலக வெற்றிக்கு உதவும். வெற்றிகள் எதுவும் மனித சமூகத்தின் வெற்றியாகும் வகை இதுவே.
மனித சமூக வெற்றியை அடிப்படையாகக் கொண்டஇவ் வெற்றி யார்வத்துக்கும் தன்னல வெற்றி யார்வத்துக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதை நீ ஊன்றிக் கவனிக்க வேண்டும். ஒருவன் வெற்றி வேறொருவன் தோல்வி அல்லது வேறு பலர் தோல்வி என்றெண்ணும் எண்ணம் தன்னல வெற்றி யார்வத்தால் ஏற்படும். ஆனால் உலக வெற்றியார்வமுடைய நல் விளையாட்டுப் பண்பாளன் தனி வெற்றியில் கொள்ளும் களிப்பையே தன் குழுவின் வெற்றியிலும் தன் எதிரியின் வெற்றியிலும் கொள்வான். அதுபோலவே தன் குழுவின் வெற்றிக்கு ஒப்பாக எதிர்க் குழுவின்