உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

||_ _.

அப்பாத்துரையம் - 46

தன்னையும் பிற மதுப் பொருள்களையும் சூதாட்டத்தின் உடன்பிறப்புக்கள் என்று கூறலாம். சூதாட்டத்திற்கு முதற் காரணமான சோம்பலே அவற்றிற்கும் முதற் காரணம். சுரண்டலே சூதாட்டத்திற்கு நிமித்த காரணமாயிருப்பதுபோலப் பிறரை எளிதில் மயங்க வைத்து ஏமாற்றும் வாய்ப்பை இவை உண்டுபண்ணுவது கண்டு சுரண்டல் வகுப்பினரே இவற்றையும் பரப்பி வாழ்கின்றனர். வெப்புள்ள குடிவகைகளில்லாமல் வாழ முடியாத மேனாட்டுச் சூழ்நிலையில் இவை தழைத்தோங்க இடமேற்பட்டது. ஆனால் உணவாக மேனாட்டினர் அருந்து வதற்கும் உணவிலா நிலையை உண்டு பண்ணுவதற்காக இவற்றை எல்லா நாட்டிலும் தீயோர் தூண்டுதலுடன் அறிவிலிகள் அருந்துவதற்கும் மிகுதியான வேற்றுமை உண்டு. ஒருபுறம் சோம்பலும் மறுபுறம் சுரண்டலுமே இவ்வேறுபட்டசூழ்நிலையை உண்டுபண்ணுகின்றன.

வெப்பம் தேவைப்படும்

சூழ்நிலைகளில் குடி

வளர்ந்தாலும் வெப்புக்கு மாறான ஒரு சூழ்நிலையிலேயே பிற போதைப் பொருள்கள் தோன்றின. புகையிலை, அபின் முதலியவை இத்தகையன. இவை கீழ்நாட்டில் இழி மக்களிடையே தோன்றின. மேனாட்டார் இவற்றை மேன்மக்கள் பழக்கமாக ஆக்கி அவற்றின் கேட்டைப் பெருக்கினர். சூதாட்டத்தில் முனைபவரே இதிலும் முனைந்திருப்பதும், சூதாட்டத்தை ஆதரிக்கும் வகுப்பினரே இதனையும் பரப்பியுள்ளதும் கண்கூடு. மேனாடுகள் இவற்றுக்கு மிகுதி அடிமைப்பட்டு விட்டன. இவற்றுக்குத் தாயகமான கீழ் நாடுகளிலும் இவற்றைப் பரப்பும் திருப்பணியை மேனாடுகளே நடத்தி வருகின்றன. ஆனால் உலகின் அறிவுடை நன்மக்கள் எதிர்த்துப் போராட வேண்டிய துறைகளுள் இது ஒன்று. தொழில் வகையில் இது உலக வணிகருக்குத் தரும் பெருத்த ஆதாயமே இதனை ஒடுக்கும் வகையில் பெருந்தடங்கலாயுள்ளது.

மேற்கூறிய இத்தனை தீமைகளும் விளையாட்டினால் ஏற்பட்டவை யல்லவாயினும் விளையாட்டாளர்கள் ஒத்துழைப் பினால், விளையாட்டு மனப்பான்மை அடிப்படையிலேயே தோன்றி வளர்வனவாதலால், விளையாட்டுப் பற்றிக் கூறுமிடத்தில் இவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியதாகிறது.