உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

161

யாரும் கூற முடியாது. நாலு துட்டுக் கொடுத்துவிட்டு நாலாயிரம் பொன் வரும் என்று இச் சூதாடி எண்ணுவது போலவே, குதிரைச் சூதாடியும் மற்றெந்தச் சூதாடியும் எண்ணுகிறான். இந்நாலாயிரம் பொன்னை ஒருவன் பெறுவதானால், பல நாலாயிரம்பேர் இழந்துதானே பெற வேண்டும். ஒருவனிழந்த பணந்தான் மற்றொருவனுக்கு வரவாக முடியும். அதுவும் பலர் இழந்த பணந்தான் ஒருவனுக்கு வரவாக முடியும் என்ற மனப்பான்மை தானே சூதாட்ட மனப்பான்மை! அதனை இச் சூதாட்டம் வளர்ப்பதுபோல் உலகில் வேறு எச் சூதாட்டமும் வளர்க்க

வில்லை என்னலாம்.

இவைதவிரக் கடைத்தெருவழியே போகும்போது ஆங்காங்கே நாகரிகமற்ற சிறு இடங்களிலும் நாகரிகமுள்ளதாகத் தோற்றும் பேரிடங்களிலும் சிறிய பெரிய கடைகளிலும் கடையோரங்களிலும் வட்டு, கட்டம், படம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போவார் வருவாரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லோரைக் காணலாம். நீ நல்லவனானால் அவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடுவதே நலம். அறிவுடைய நல்லவர் எவரும் இவற்றை நோக்கவும் மாட்டார்கள்; இவற்றுக்கு ஆதரவு தரவும் மாட்டார்கள். பெரும்பாலும் செல்வர்கள் கூட இத்துறையில் மிகுதியாகச் சென்று கெட மாட்டார்கள். பணத்தின் அருமையை அவர்கள் அவ்வளவு அறியாதவர்கள் அல்லர். ஆனால் அறிவற்ற ஏழை நல்லோர்கள், உலக அநுபவமில்லா நல்லிளைஞர்கள் சிலந்தி வலையில் அகப்படும் சிறு பூச்சிகள் போல இதில் சிக்கிக் கொள்வர். செல்வர், அறிஞர் ஆகியவர்களைக் கெடுக்கும் பிற சூதாட்டங்களை விட, ஏழைகளைச் சுரண்டும் இது மிகமிகக் கொடிது. உலகின் நல்லரசாங்கங்கள் பல இதைத் தடுத்தொழித்தே வருகின்றன. ஆனால் ஏழைகளின் அறியாமையிலிருந்து ஏழைகளைக் காப்பாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவ் ஏழைகளின் அறியாமையே தடையாயிருக்கின்றது. எல்லோருக்கும் கல்விக் கான வசதிகள் செய்து, கல்வியின்மை ஒரு குற்றமாகத் தண்டிக்கப் பட்டுக் கல்வியில் இவைபற்றிய எச்சரிக்கை விளக்கமும் ஒரு பகுதியாகக்கொள்ளப்பட்டாலன்றிச் சட்டங்களால் மட்டும்கூட இத் தீமையை முற்றிலும் ஒழிக்க முடியாது.