உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(160) || __ .

ச்

அப்பாத்துரையம் - 46

ஓட்டப் பந்தயத்தில் இச் சூதாட்டம் சிறிதுமில்லை என்பதை நோக்க, இத்துறையில் சூதாட்டத்தைப் புகுத்திய மேனாட்டு நாகரிகம் வெட்கித் தலைகுனிய வேண்டும். குதிரைப் பயிற்சி, குதிரை வேக வளர்ச்சி, தொழில் ஆதரவு ஆகிய நலங்களைக் காட்டி இத்துறைச் சூதாட்ட அடியார் பலர் வாய்வாதம் கூறுவர். வை யாவும் சூதாட்டமில்லாத பழங்கால நல்ல ஓட்டப் பந்தயத்திலுள்ளவையே. இவை பழங்கால மனித சமூக நாகரிகத்துக்குப் பெருமை தரவல்ல சமூகக் கேளிக்கைகள். விழாக்கள் ஆகியவற்றின் பண்புகள்; தற்கால முதலாளித்தனமான நாகரிகம் அவற்றில் புகுத்திய பெருமையல்ல. மேனாட்டு நாகரிகம் இவ்வகையில் பழைய அமுதத்தில் தன் புதிய நஞ்சைச் செலுத்தி மறைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அது

சூதாட்ட மனப்பான்மை மனையக விளையாட்டுக் களையும் புறவெளி விளையாட்டுக்களையும் கெடுத்ததுடன் நிற்கவில்லை. கலைகளையும் கூடப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில பல இடங்களில் அதுவே கலப்பற்ற ஒரு நச்சுக் கலையாகவும் வளர்ந்து வருகிறது. வாணிகத்துடன் வாணிகமாய் தொழிலுருவிலும் காட்சியளிக்கிறது. இனி ஆட்சியுடன் ஆட்சியாய் அரசியலையும் கைப்பற்றி நாகரிகத்தையே அழிக்கவும் முற்படாதென்று கூறுவதற்கில்லை. தற்கால நாகரிகத்தில் பெருமை கொண்டு அதனைப் பேணுபவர் அதனுடன் இவற்றையும் பேணினால், தெரிந்தோ தெரியாமலோ அந் நாகரிகத்தை அழிக்க உதவியவரே யாவர். பாலுக்குக் காவலிருந்தவன் பூனைக்கும் தோழனான கதையையே நினைப்பூட்டவல்லதாகும்.

து

தற்காலப் பத்திரிகைகளிற் பல சூதாட்டத்திற்குக் குறுக்கெழுத்துப் போட்டி, நெடுக்கெழுத்துப் போட்டி, அறிவுப் போட்டி, பகுத்தறிவுப் போட்டி என அழகான பெயர்களைக் கொடுத்து அறிவுவகுப்பினிடையிலும் சூதாட்டத்தையும் சூதாட்ட மனப்பான்மையையும் வளர்த்துவருகின்றன. அறிவு வகுப்பாரே ஆட்சி செலுத்தும் தற்கால அரசாங்கங்களும் இவற்றைச் சில பல சமயம் கடைக்கணித்து வருகின்றன. சூதாட்டத்தை ஆதரித்துப் பேசுபவர் கூறும் வாதங்கள் போன்ற வாதங்களை இதற்குங் கெட்ட பண்பும் இதில் இல்லை என்று