184
அப்பாத்துரையம் - 46
என்னே அவனது துணிவு! என்னே அத்துணிவின் அமைதி!! காண்பது இன்னது. செய்வது இன்னது என்றுணராது திகைத்து நின்ற அவன் தோழர்கள் அவன் சென்றது கண்டனர்; மறைந்திட்டதை உய்த்தறிந்தனர். அதன் பின்னரே அவர்கள் உற்றதுணர முடிந்தது. அப்போதுதான் அவர்களுக்கு அவன் செயலின் பொருளும், அவன் கொண்ட துணிவுக்கான காரணங்களும் மெள்ள மெள்ள விளங்கலாயின. போக இருந்த தம் உயிர்களையும் அச்சமயத்தில் அவர்கள் மறந்து, உடலுடன் மனித உலகுக்கு அப்பாற் சென்றுவிட்ட அவன் உயிரை எண்ணித் துடிதுடித்தனர். அவன் வீரத்தை எண்ணி இறுமாப் பெய்தினர். அவன் அன்பின் ஆற்றலை யெண்ணிப் புன்கணீர் பனித்தனர்.
உ
வீரன் புகழ்க்கொடி ஏற்றியாய்விட்டது. இனி வீரர் தம் கொடியேற்ற முனைந்தனர்; வீரன் தியாகத்தை எண்ணி எண்ணி அவர்கள் ஏங்கினர். ஆனால் அத்தியாகங்கூடத் தம் தியாகத்தை இனித் தடுக்க முடியாதென்பதையும் அவர்கள் உணர்ந்தனர். ஆயினும் அத்தியாகத்தினூடாக அவர்களுக்கு இன்னும் ஓர் பொறுப்பு மீந்திருந்தது. மீகாமன் உயிரை அவர்கள் மனித உலகுக்குக் கொண்டு செல்ல முடியாது. மீகாமன் உடலைக் கொண்டு செல்லும் வேலையைக்கூட அவன் அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை. அவர்கள் இப்போது கொண்டு செல்லத்தக்கது அல்லது கொண்டு செல்ல முயலத்தக்கது அவர் புகழ், அவர் மாண்ட புகழ்வரலாறு ஒன்றே. அதுவும் சென்றெட்டும் வரை தாம் உயிருடனிருப்போம் என்று யாரும் உறுதி கூறுவதற்கில்லை. ஆகவே அவர்கள் தம் இறுதி நேரத்திலும் அதற்கான முன்னெச்சரிக்கையில் முனைந்தனர்.
நாட்குறிப்பில் அவர்கள் விட்ட இடத்திலிருந்து மீகாமன் உயிர் விட்ட இடம் வரையுள்ள குறிப்புக்களை எழுதி முடித்தனர். தாம் இனிச் செய்யவிருக்கும் கடைசி முயற்சித் திட்டமும் குறித்தனர். அதன்பின் கடமையாற்றிய காவல் வீரரின் உணர்ச்சியுடன் தம்மாலியன்றவரை தம் உயிருலகத்தோழரை நோக்கி தம்மை அவர்கள் தேடியேனும் கண்ட கதையைக்கூடிய உலகின் எல்லையரு கிடம் நோக்கிவிரைந்தனர்.
இக் கடைசி வேலையை மட்டும் அவர்கள் எப்படியோ நிறைவேற்றி விட்டனர் என்னலாம். அவர்கள் கப்பலுக்கு ஒரு சில