உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

199

இத்தகைய முத்திற உயர்பண்புக்குரிய பெண்மையைப் போற்றுதல் நற்பண்பு; தூற்றுதல், புறக்கணித்தல், ஒதுக்குதல் இவை யாவுமே இழிபண்பின் குறிகள். இவ்வழுக்கள் தொடர்பு அல்லது சாயல், அல்லது அதற்கான சிறு முன் குறிகள் தோற்றுமானால் கூட, அவற்றிற்குறியார் இழிபடுபாளர்; அவர்கள் தொடர்பு தீய தோழமையின் பாற்படும் எனத் தேர்ந்துகொள்ளலாம்.

பிரிட்டனின் உயர்பண்பு, பிரிட்டனைப் போன்ற பிற நன்னாடுகளின் நற்பண்பு, பிரிட்டானியர்கள் தம் பண்பின் தாயகங்களெனக் கருதும் உரோம, கிரேக்க, பாலஸ்தீன நாடுகளின் பண்புகள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவை யாவும் பெண்மைக்கும் நற்குடி வாழ்வுக்குப் பெருமை கொடுத்த அளவில்தான் பெருமையுடையன என்பதை நீ காணலாம். உலக நாகரிகம் பெண்கள் ஆட்சி செய்யும் வீட்டுப் பண்பில் விதையூன்றி முளைத்து, நல்லறிஞர் ஏட்டுப்பண்பில் தவழ்ந்து கொடியாகப் படர்ந்து, நாட்டுப் பண்பில் நறுமலராகப் பூத்து மணம்வீசி, உலக நாகரிகப் பண்பாய்க் கனிந்து கனி தருகிறது என்று காண்பாய்.

மனிதர் எவருமே தம் தாய், தம் தமக்கை, தங்கையர், தம் துணைவியர், தம் புதல்வியர் ஆகியோரைப்பற்றி இழுக்காக கருதார் என்று நீ எண்ணலாம். பேரளவில் இது உண்மையும் ஆகும். ஆனால் தீமைகள் மனிதர்மீது தெளிவாகத் தீமையுருவில் வந்து படர்வதில்லை. தாய், தமக்கை, தங்கை, மனைவி, புதல்வி என்ற நற்பெயர்களைப் பெண் என்ற பொதுப் பெயரில் நாம் சில சமயம் மறப்பதுண்டு. அத்துடன் என்னுடைய, உன்னுடைய என்ற தன்மை முன்னிலைப் பெயர் சாராது. அவனுடைய, அவருடைய என்ற படர்க்கை பெயர்கள் சார்ந்து, கண்காணாதவர், தம் குடிசாராதவர், தம் இனம் சாராதவர், தம் நாடு சாராதவர் ஆக கியவர்களுடன் சார்ந்து வருமிடத்தில் மனித இனம் பெண்மையின் பெருமையை மறக்கத் தொடங்குகிறது. தீயோர் இவ்வியல்பைக் கையாண்டு, தொலைத் தொடர்புடைய பெண்டிர், அப் பெண்டிர் தொடர்பு ஆகியவற்றை நையாண்டி செய்யப்பழகி, அதன்பின் அத் தொலைப்பண்பைப் பொதுப் பண்பாக்கி, இறுதியில் தம்மைத் தாமே இழிவுபடுத்திக் கொள்ள