அப்பாத்துரையம் - 46
202 || வலுப்படுத்தி அது உலகில் நாகரிகமுள்ளளவும் தன் ஆற்றலைத் தொடர்ந்து வளரச் செய்யும்.
தீய தோழமை எளிதானால், அதுபோலவே தீய எண்ணங்களும் எண்ணமற்ற செயல்களும் செயலார்வமற்ற வழக்கங்களும் பழகி ஊறிப்போன பழக்கங்களும் நம்பிக்கைகளும் கருத்துக்களும் எளியவையாகவே இருக்கும். ஒரு சிறு செயலால், ஒரு சிறு சொல்லால், ஒரு சிறு கருத்தால் வாழ்க்கை முழுவதும் தவறிய மனிதர் வரலாறுகள் பல. அதுபோல ஒரு சிறு செய்தியால் முழுதும் உயர்வு பெற்றவரும் உண்டாயினும் இது அரிதினும் அரிதே. யாரோ ஒருவன் கூறிய சமய உரையால், ஜான்பனியனின் சமய வாழ்வு முற்றிலும் மாறி, அவர் புண்ணிய வழிப்போக்கு' (Pilgrims Progress) என்ற நூலை எழுதும்போது தூண்டுதல் ஏற்பட்டது. ஆனால் இவ்வொரு நற்சான்றுக்கு மாறாகத் தீவழிச் சான்றுகள் பல. இவற்றுள் ஸ்காட்லந்தின் அருங்கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் ஒரு குன்றின் மேலிட்ட விளக்கனைய எச்சரிக்கையாகும். அவர் இளமையின் களியார்வம் கொண்ட ஒரு தோழர் கவர்ச்சியி லீடுபட்டுப் பல தீய பழக்க வழக்கங்களுக்காளான பின்பே அவர் போக்கு அருவருக்கத்தக்க போக்கு என்பதை அவர் காண முடிந்தது. ஆனால் இவ்வறிவின் பயனாக, பர்ன்ஸின் கருத்து மாறி அவர் கவிதை உயர்ந்ததேயன்றி, அவர் வாழ்க்கைப் போக்கு மாறவில்லை. அவர் கவிதையுஞ் செல்வமும் முழு வளர்ச்சி பெறாமலே இளமையில் துண்டிக்கப்பட்டுப் போயிற்று. அத்தீய பழக்கங்களுக்கு அத் தலைசிறந்த ஸ்காட்லந்துக் கவிஞர் இரையாயினார்.
நீ தீயவற்றை எண்ணாமலும் செய்யாமலும் இருக்கலாம். ஆனால் கூட்டத்தில் ஒருவனாக நீ தீயவைக் கேட்டுத் தீயவை கூறாமலிருத்தல் அரிதினும் அரிது. அதையும் நீ காத்துக் கொண்டிருந்தாலும் கூட, அக்கூட்டத்தில் இருப்பதனாலேயே உன் மனம் கறைப்படுவது உறுதி. இன்பத்தில் ஒன்றுபட்டு உரையாடும் கூட்டம், அக்கூட்டத்திலுள்ள தனி மனிதர் எவரும் செய்யத் துணியாச் செயலைச் செய்ய வல்லது என்பதை நீ ஒருவேளை கவனித்திருக்க மாட்டாய். பல நல்ல பிளளைகள் சேர்ந்தவழி ஒரு தீய குழு அமையக்கூடும் என்பதையும் நீ கவனிக்கலாகும். இதனையே அறிஞர் கும்பலுணர்ச்சி (Mob.Mind)