வருங்காலத் தலைவர்கட்கு
203
என்பர். கும்பல்களில் ஆய்ந்தோய்ந்து பாராத தனி மனிதர் ன்பம் மட்டும் நாடிச்சேர்வதால், அவர்களின் உள்ளார்ந்த தீமைகள் மட்டும் ஒருங்கிணைகின்றன. இதனாலேயே இக் கும்பலுணர்ச்சி வளர்கிறது. ஆய்ந்தோய்ந்து உரையாடும் நண்பர் குழுக் கூடுகிற இடத்தில் இதற்கு நேர்மாறான தொகுதி மனப்பான்மை (Group or Team Spirit) ஏற்படும் நிலையான தொகுதிகளில் அது ஒப்பற்ற ஒற்றுமைப் பாட்டுணர்ச்சி (Espirit de Corps) ஆக இயங்கிச் செயற்கரிய காரியங்களைச் செய்து வெற்றிகாண வைக்கும். இவ்விருவகைக் குழுவமைப்புக்களின் வேறுபாடறிந்து பின்னதன் வகையை வளர்க்க வேண்டினால் நட்புப் பேணுக. நற்பண்பு பேணுக; பயனுடைய இன்பமே. மன்னலத்துக்கு உறுப்பாகிய தன்னலமே வளர்க்க. குழு அத்தகையது அன்றென உணர்ந்தால், அல்லது அத்தகைய குழுவினுக்கு உதவாத சொற்கள் பயின்றால், அதற்கு நீ கூடிய மட்டும் ஆதரவு காட்டாது ஒதுங்குவாய்! இவை மேன்மேலும் பயின்றால், அக்குழுவையே புறக்கணிக்கக் கடவாய்! இது ஒன்றே உலகில் நீ நற்பண்பாளனா யிருப்பதற்கும், உலகில் தீய பண்புகளை நலிவித்து நற்பண்புகளைப் பேணுவதற்கும் உன்னால் செய்யக் கூடும் பணி.
இன்ப நாட்டம்
கூடாது
என்பதனால் இன்பக் கேளிக்கைகள் தவறு என்று கொண்டுவிடாதே. உண்மையில் உழைப்போர்க்கு இன்பத்தினும் பயன்தரும் பொருள் வேறு துவுமில்லை. நாள் முழுதும் உழைப்போர்க்கு மாலையில் கேளிக்கையும் முன்னிரவில் நாடகமும் படக் காட்சியும்போல உயர்ந்த இன்பமும் உயர் பயன்தரும் இன்பமும் வேறு காண்டலரிது. நல்விழாக்களும் பொருட் காட்சிகளும் நாடு சூழ்வரல்களும் இத்தகையவையே. ஆனால் இவை எவையும் தீய தோழமையையோ தீய தோழமைப் பண்புகளையோ வளர்ப்பவையாயிருந்தால் இவற்றினும் கேடு வேறில்லை. கலையும் இலக்கியமும்கூடத் தீய தோழமைக் குழுவினரால் கைக்கொள்ளப்பட்டு இந்நிலை யடைவதுண்டு. மில்ட்டனைப் போன்ற நாட்டுக் கவிஞரும் கெதேயைப் போன்ற உலகக் கவிஞரும் தம் கலைக் குறிக்கோளின் உயர்வின் பயனாக இவற்றினின்று விலகி நின்றனராயினும், உலகக் கவிஞரான தாந்தேயும் ஷேக்ஸ்பியரும் நன்மையின் எல்லைக்கோட்டில்