(204
அப்பாத்துரையம் - 46
தீமைக்கும் நன்மைக்கு மிடையிலுள்ள நுண்ணிய வாள் முனையில் நடந்தனர் என்பதும், சில சமயம் தீமையின் பக்கம் அவர்கள் சாயாது தப்ப முடிந்ததில்லை என்பதும் எச்சரிக்கையாகக் கவனிக்கத் தக்கது. உலகப் பெருங் கவிஞர் கவிதையெல்லையிலேயே வந்து அச்சுறுத்தும் இந்நச்சுக் கலைப்பண்பு அதிற் குறைந்த மதிப்புடைய கலைக்கு எத்தகைய தீமை என்று கூறத் தேவையில்லை. மனிதப் பண்பை உயர்த்தப் பயன்படுத்தாமல் இழிவுபடுத்தியே இன்பம் பயக்கும் கலைப் பண்புகளும், மக்களிடையே குறுகிய நாட்டு வேற்றுமை, இன வேற்றுமை, வகுப்பு வேற்றுமை, ஆண் பெண் வேறுபாடு, சமய வேற்றுமை ஆகியவைகளைத் தகா முறையிலும் உயர்வு தாழ்வும் கசப்பும் தரும் வகையிலும் வளர்க்கும் கலைப் பண்புகளும் கனிவோ, இரக்கமோ இன்றி ஒழிக்கத் தக்கவை. அவற்றின் கலை குடிகாரன், கொள்ளைக்காரன், கொலைகாரன் ஆகியோர் பாட்டுக்களிலுள்ள கலை போன்றதுதான். மனிதப் பண்புடைய கலைஞர் எவரும் இத்தகைய கலையைத் தீண்ட மாட்டார்.
வாழ்விலும், கலையிலும், அரசியலிலும் நீ வேறுபடுத்தும் பண்புகளையும், உயர்வு தாழ்வுப் பண்புகளையும், மக்கள் அறிவு வளர்ச்சியைத் தடுக்கும் பண்புகளையும் எதிர்ப்பதையே உன் வாழ்க்கைப் போராட்டமாகக் கொள்வாய். இதற்கான ஒப்பற்ற கருவியாகவே நீ நட்பினை நாடுகிறாய். நீ வெறுப்பதை உன் நண்பரும், நண்பரின் நண்பரும், அவர் நண்பரும் என உன்னுடன்
டர்புள்ள உலக முழுவதுமே எதிர்க்கும். உன்னை எதிர்ப்பவர்களும் துபோலவே தாமும் தம் தோழர்களும் தோழர்களின் தோழர்களும் அவர்கள் தோழர்களுமாக எதிர்ப்பர். உலகம் ரண்டுபட்டு நடைபெறும் இந் நன்மை தீமைப் போராட்டத்தில் தீயோர் திறத்துக்கு ஒற்றுமை தேவைப்படாது. தீமை ஒற்றுமை யில்லாமலே செயலாற்றத் தக்கது; இன்னும் தெளிவாகக் கூறப் போனால், வேற்றுமைகளை வளர்ப்பதே அதன் வெற்றியின் மறைதிறவுகோல். வேற்றுமை வளர்க்கத் தீயவர் கையாளும் முறைகள் எண்ணற்றன. நீ உயர்வாகக் கொள்ளும் குறிக்கோள்களின் பெயர்கள் யாவற்றையும் நீ உன் கொடியில் காண்பது போலவே, அவர்கள் கொடியிலும் காணலாம் அவர்கள் தரப்பையும் உன் தரப்பையும் வேறு பிரித்தறியக் கூடியவை புறத் தோற்றமல்ல. அடிப்படைப்