உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

(205

பண்புகளே. நீ ஒரு உலகக் குறிக்கோளுடையவனாய், உலக மக்கள் அனைவரின் நலமும் பேணுபவனாய், உன் நாடு, இனம், வகுப்பு ஆகியவற்றுக்கு உழைக்கும்போதும் ஓருலகை மறவாது, உயர்வு தாழ்வு பேணாது செயலாற்றுபவனாய் இருந்தால் எந்தப் பெயரிட்டு எவ்வுருவில் தீமை வந்தாலும் அதனை நீ உணர்ந்து விலக்கி எதிர்த்தழிப்பாய். உனது இப்பணியில் உதவுபவர் எதிர் தரப்பினர் போல் சில சில கூறுகளில் செயலாற்றுபவராயினும், மொத்தத்தில் உன் அடிப்படைப் பணியில் உதவுபவர் உன் நண்பர், அல்லது நண்பரின் நண்பர். அல்லது நண்பர் தொடர்புடையார் என்று அறிக. உன் பணிக்கு ஊறு செய்பவர் உன் நாட்டினராயினும் உன் குடியினராயினும் உன்னைப் பெற்ற தந்தையாயினும், அவர்கள் உன் தரப்பினர்போல் சில பல கூறுகளில் தோற்றினும், அவர்களை உணர்ந்து உன் உலகினுக்கும் உணர்த்துதல் உன் வாழ்க்கைக் கடன்.

உலகப் போரில் நேச நாட்டினர், பகை நாட்டினர் என்ற வேறுபாடு தலைமையானது. நொதுமலர் பகைவருக்கு உதவாதபோது நண்பராகவும், உதவியபோது பகைவராகவும் கணிக்கப் படுவர். உலக வாழ்க்கைப் போராட்டத்திலும் நாகரிகப் போராட்டத்திலும் அதுபோலவே உலகத்தில் இரு ஆற்றல்கள் உள்ளன. அவற்றுக்கிடையே நன்மை தீமை உணர்வின்றி நொதுமலராகப் பலர் உள்ளனர். நண்பர் மூலம் நட்புலகை வலிவடையச் செய்து நொதுமலர்களை நட்புலகின் வயமாக்கிப் பகையுலகில் தவறிச் சென்றோரை மீட்கும் அரும்பணியில் ஈடுபடுவாயாக. நட்பெனும் அரிய புணை இவ்வளப்பரும் டலகத்து உன்னை நன்னெறிப் படுத்தி உய்க்குமாக.

நட்புலகின் இவ்வொற்றுமைக்குப் பெரிதும் உதவுவது உயிர் மறுப்பு (தியாகம்), தகுதி (Honour) என்ற ஒன்றினுக்காகவும், நண்பர் நலம் என்ற ஒன்றினுக்காகவும், நண்பர் என்றும் உயிர்விட ஒருக்கமா யிருத்தல் வேண்டும். தகுதி என்பதே நட்புலகின் பொதுநலம் ஆதலால், ஒவ்வொருவர் தன்மறுப்பும் உயிர் மறுப்பும் அனைவரையும் பேணுகின்றது. அதேசமயம் நட்புத்தளை மூலம் ஒவ்வொரு வரும் தனித்தனியாகவும் ணைக்கப் படுகின்றனர். எனவே இந் நட்புலகத்தளை ஒருவருக்காக யாவரும், யாவருக்குமாக ஒவ்வொருவரும் என்ற நீக்கமற்ற நிறை ஒற்றுமயை விளைவிப்பதாகும்.