206
அப்பாத்துரையம் - 46
நண்பர் நலத்தில் கருட்தூன்றிய நண்பர் அறிவு ஒன்றே. தன்னலம், பொதுநலம்; அன்பு, கண்டிப்பு; விட்டுக்கொடுப்பு, எதிர்ப்பு; இன்பம், கேடு ஆகிய முரண்படும் கடமையுணர்ச்சி யினிடையே, நட்புக் கலத்தை நடுநிலை வழியில் செலுத்தவல்லது. வடவானில் வடமீன் இது என இடஞ் சுட்டிக் காட்டவல்ல கைகாட்டிமீன்கள் போல நண்பர் நலம், பொதுநலம் ஆகிய இரு பண்புகளும் நன்னட்புக்கு நல்ல வழிகாட்டிகளாயமையத் தக்கவை.
பொதுநலத்தூன்றிய நண்பர்தம் தன் மறுப்பினும் இறும்பூது தருவது எதுவுமில்லை. கள்ளங்கபடற அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் உரையாடும் உரையாடலினும் இனிது உலகில் வேறு எதுவுமிருக்க முடியாது. பிரிவு ஒன்றன்றி, அவர்களறியும் துன்பமும் வேறில்லை. ஆனால் நட்பு இப்பிரிவுத் துன்பத்தையும் இறுதியான மறைவுத் துன்பத்தையும் கடந்து ஒளி வீச வல்லது. இடத்தின் எல்லையற்ற பரப்பையும் காலத்தின் எல்லையற்ற பரப்பையும் இரண்டையும் அது தாண்டவும் வல்லது. ஹெராக்ளிட்டஸ் என்ற பண்டைக் கிரேக்க கவிஞன் இறந்தபோது அவர் நண்பர் ஒருவர் பாடிய கவிதை இதனைக் காட்டுகின்றது. கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த இக் கவிஞர் பெருமான் பல இனிய கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றனராயினும், அக் கவிஞர் மறைவால் அந்நண்பர் வாய்விட்டுக் கூறிய இக் கவிதை அவற்றுடன் சேர்க்கப்பட்டு, அவற்றினும் பன்மடங்கு சிறப்புடைய தாய் நட்பின் இலக்கியப் பாட்டாய் இலங்குகின்றது.
இயம்பினர் நீ இறந்தனை' யென்று; என்னரிய
ஹெராக்கிளிட்டஸ்! இறந்தாய்' என்றே
மயங்கினன்யா னும்; மயங்கி மலையருவி
என எழுந்த விழுந்தழன்றே
கலங்கினன், நின் னோடிருதுக ளித்துதவும்
உரைத்ததுவும் கருத்திற் கொண்டே;
விலங்கலிடைக் கதிரெழுந்து விழுந்தும்உரை
ய