உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

81

லெமூர்ஸை எதிர்த்துப் போரிட்டான். இருவரும் மாறிமாறிக் குத்திக் கொள்ள முயன்றும் இறுதியில் லெமூர்ஸ் விழுந்தான். அவனைப் பின்பற்றி வந்த வீரரும் அது கண்டு ஓடி விட்டனர். லெமூர்ஸ் குதிரையும் அவனை இழுத்துக் கொண்டே ஓடிற்று.

போரில் ஈட்டியால் குத்தப்பட்டு நெஞ்சில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டுக் கவசத்தினுள்ளாகக் குருதி கசிவதைக் கூடக் கெரெய்ன்ட் பொருட்படுத்தவில்லை. எனிட் அதனைக் குறிப்பாயறிந்தும் ஒன்றும் பேசத் துணியாமல் மெல்லச் சென்று காண்டிருந்தாள். ஆயினும், அவன் முற்றிலும் சோர்ந்து விழுந்து விடவே, அவள் உடனே குதித்துச் சென்று, அவன் கவசத்தை அகற்றித் தன் மேலாடையைக் கிழித்துக் கட்டினாள். காயம் படுகாய மானதனாலும், குருதி மிகுதியும் சிந்தியதனாலும் கெரெய்ன்டு தன்னுணர் வின்றிக் கிடந்தான். எனிடின் குதிரை கூட ஓடிப்போய் விட்டதனால், தான் முற்றிலும் தனிமையாய்ப் போய்விட்டதைக் கூட அறியாமல் ஏழை எனிடு அழுது கொண்டிருந்தாள்.

அவ்வழியாக அச்சமயம் வேட்டைக்குப் புறப்பட்டு டூர்மும் அவன் ஆட்களும் வந்தனர். கெரெய்ன்டு இறந்து விட்டவன் போலவே கிடந்ததனால் டூர்ம் என்னைக் கைப்பற்றும் நோக்கங்கொண்டு நன்மை செய்ய எண்ணியவன் போல் கெரெய்ன்டுடன் அவளை அரண்மனைக்குக் கொண்டு போகும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.

அன்று முழுவதும் எனிட், கெரெய்ன்டுக்கு உணர்வு மீளும்படி எல்லா முயற்சிகளும் செய்தாள். அன்று முழுவதும் அவள் உணவு உட்கொள்ளவே யில்லை.

மாலையில் வந்த டூர்ம் நல்ல உணவும் குடியும் தந்தும், நல்லுடையுடன் ஆடையணிகளையும் தந்தும் அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். கெரெய்ன்டு இறந்து விட்டதாக, அல்லது இறக்கும் நிலையில் இருப்பதாகவே எண்ணியதனால், அவன் அவளை மிகுதியும் வற்புறுத்தியிழுக்கவே அவள் "ஐயகோ" என்றலறினாள்.

பெண்மை முழுவதும் வெளியிட்டலறிய அவ்வலறலில் சற்றுத் தன்னுணர்வு

மீண்டு வரும் நிலையில் இருந்த